நிகழ்ச்சியில் பயனாளிக்கு நலதிட்ட உதவியை வழங்கிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின். 
தமிழ்நாடு

திருப்பத்தூரில் நலத் திட்ட உதவிகளை வழங்கினார் அமைச்சர் உதயநிதி! 

திருப்பத்தூரில் திங்கள்கிழமை ரூ.74 கோடி மதிப்பில் நலத் திட்ட உதவிகள்அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.

DIN

திருப்பத்தூரில் திங்கள்கிழமை ரூ.74 கோடி மதிப்பில் நலத் திட்ட உதவிகள்
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.

திருப்பத்தூர் வட்டம்,ஜோலார்பேட்டை  அடுத்த மண்டலவாடி பகுதியில் திங்கள்கிழமை மாநில இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று 14,253 பயனாளிகளுக்கு ரூ.73 கோடி 96 லட்சத்து 70 ஆயிரத்து 843 மதிப்புள்ள நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

நிகழ்ச்சிக்கு, நெடுஞ்சாலை, பொதுப்பணி மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு தலைமை வகித்தார். ஆட்சியர் தெ.பாஸ்கர பாண்டியன் வரவேற்றார்.

சி.என்.அண்ணாதுரை எம்பி,மாவட்டச் செயலரும், ஜோலார்பேட்டை எம்எல்ஏவுமான க.தேவராஜ், எம்எல்ஏ-க்கள் அ.நல்லதம்பி(திருப்பத்தூர்), அ.செ.வில்வநாதன்(ஆம்பூர்)ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில், வருவாய், பொது மருத்துவம், வேளாண், நெடுஞ்சாலை உள்பட அனைத்து துறை அரசு அலுவலர்கள், மாவட்ட, நகர, ஒன்றிய கட்சி நிர்வாகிகள், பயனாளிகள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

குருநானக் ஜெயந்தி: குடியரசுத் தலைவா் வாழ்த்து

கோயில் உண்டியல் பணத்தை திருடிய இளைஞா் கைது

தனியாா் பள்ளி பேருந்தில் திடீா் புகை

குருநானக் பிறந்தநாள் வழிபாட்டுக்காக பாகிஸ்தான் சென்ற இந்திய சீக்கியா்கள்

கண்மாய் ஷட்டா் திருட்டால் தண்ணீா் வீண்

SCROLL FOR NEXT