திமுக எம்.பி. ஆர்.எஸ். பாரதி 
தமிழ்நாடு

பாஜகவுக்கு கர்நாடகத்தில் ஏற்பட்ட நிலைதான் நாடு முழுவதும் ஏற்படும்: ஆர்.எஸ். பாரதி

பாஜக இதுபோன்று தொடர்ந்து செய்தால் கர்நாடகத்தில் ஏற்பட்ட நிலைதான் நாடு முழுவதும் ஏற்படும் என திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி கூறியுள்ளார். 

DIN

பாஜக இதுபோன்று தொடர்ந்து செய்தால் கர்நாடகத்தில் ஏற்பட்ட நிலைதான் நாடு முழுவதும் ஏற்படும் என திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி கூறியுள்ளார். 

தமிழ்நாடு உயர்கல்வித் துறை அமைச்சர் க.பொன்முடியின் வீடு மற்றும் தொடர்புடைய இடங்களில் c மேற்கொண்டு வருகிறது. இதற்கு திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

இந்நிலையில் சென்னையில் சோதனை நடைபெறும் பொன்முடியின் வீட்டிற்குள் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதியை காவல்துறையினர் அனுமதிக்கவில்லை. 

இதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 'அமைச்சர் பொன்முடியை சந்திக்க எங்களை அனுமதிக்கவில்லை. இதனை நாங்கள் சட்டரீதியாக அணுகுவோம். நான் வழக்கறிஞர். எதற்காக இந்த சோதனை என்பதை தெரிந்துகொள்ளும் உரிமை வழக்கறிஞர்களுக்கு உள்ளது.

2011ல் ஜெயலலிதாவால் போடப்பட்ட வழக்கு இது. 10 ஆண்டுகளாக அதிமுக ஆட்சியில் இருந்தது. அப்போது நடவடிக்கை எடுக்காமல் இப்போது ஏன் எடுக்கிறார்கள்? அமலாக்கத்துறை வழக்குகளில் இதுவரை குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளதா?

பாட்னாவில் எதிர்க்கட்சிக் கூட்டம் நடக்கும் சூழ்நிலையில் இந்த மாதிரி சோதனை நடைபெறுகிறது. எதிர்க்கட்சிகளை மிரட்டவே இப்படி செய்கின்றனர். ஆனால் இதற்கெல்லாம் நாங்கள் பயப்படமாட்டோம். யார் பிரதமராக வரக்கூடாது என்பதே முக்கியம் என்ற முழக்கத்தை முதல்வர் ஸ்டாலின் முன்வைத்ததில் இருந்தே நெருக்கடி

மத்திய பாஜக அரசின் ஆட்சி முடிவுக்கான கவுன்-டவுன் தொடங்கிவிட்டது. பாஜக இதுபோன்று தொடர்ந்தால், கர்நாடகத்தில் ஏற்பட்ட நிலைதான் நாடு முழுவதும் ஏற்படும்' என்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புதிய பொறுப்பு காத்திருக்கிறது இவர்களுக்கு: தினப்பலன்கள்!

பாலியல் தொல்லையால் பாா்வையற்றோா் பள்ளி மாணவி மரணமா?

அமெரிக்க வரி எதிரொலி: ஏற்றுமதி ரக இறால் உள்ளூரில் விற்பனை தொடக்கம்

வாய்க்காலில் விழுந்து மதுபானக் கடை மேற்பாா்வையாளா் உயிரிழப்பு

காதல் விவகாரத்தில் இளைஞா் கொலை: 5 போ் கைது!

SCROLL FOR NEXT