தமிழ்நாடு

அமலாக்கத்துறை அலுவலகத்துக்கு புறப்பட்டார் பொன்முடி!

DIN

சென்னையில் அமலாக்கத்துறை அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராக அமைச்சர் பொன்முடி புறப்பட்டுச் சென்றுள்ளார். 

தமிழக உயா் கல்வித் துறை அமைச்சா் க.பொன்முடிக்கு சொந்தமான 9 இடங்களில் அமலாக்கத் துறையினா் திங்கள்கிழமை சோதனை செய்தனா்.

கடந்த 2006-2011 வரையிலான திமுக ஆட்சிக் காலத்தில் விழுப்புரம் வானூர் அருகே செம்மண் குவாரி ஏலத்தில் அமைச்சர் பொன்முடி தனது உறவினருக்கு உரிமம் வழங்கியதாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் புகார் எழுந்தது.

இந்த விவகாரத்தில் அமலாக்கத் துறை செம்மண் குவாரி முறைகேடு தொடா்பாக சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் பொன்முடி, கெளதம சிகாமணி ஆகியோருக்குச் சொந்தமான 9 இடங்களில் திங்கள்கிழமை காலை ஒரே நேரத்தில் சோதனை செய்தனா். 

மேலும் விசாரணைக்காக பொன்முடியை அழைத்துச் சென்ற அமலாக்கத்துறை அவரிடம் 5 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை மேற்கொண்டனர். 

தொடர்ந்து சென்னை, விழுப்புரத்தில் நடைபெற்ற சோதனை நிறைவடைந்த நிலையில் அமைச்சர் பொன்முடி செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு ஆஜராக சம்மன் வழங்கப்பட்டது. 

அதன்படி, 2 ஆவது நாளாக சென்னையில் அமலாக்கத்துறை அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராக அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மகன் கெளத சிகாமணி ஆகியோர் சென்றுள்ளனர். மாலை 4 மணிக்கு விசாரணை தொடங்குகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாஜக வெற்றி பெற்றால் 2025 முதல் அமித் ஷாவே பிரதமர்: கேஜரிவால்

வாலாஜாப்பேட்டை அருகே தனியார் தொழிற்சாலை பேருந்து விபத்து: 18 தொழிலாளர்கள் படுகாயம்

வள்ளியூரில் ரயில்வே சுரங்கப் பாதையில் சிக்கிய அரசுப் பேருந்து: ஓட்டுநர் பணியிடை நீக்கம்

தங்கம் விலை அதிரடி உயர்வு: இன்றைய நிலவரம்

ஸ்லோவாகியா பிரதமர் மீது துப்பாக்கிச்சூடு: மோடி கண்டனம்

SCROLL FOR NEXT