சிதம்பரம்: சிதம்பரம் அண்ணாமலை நகர் ஓபி மெயின் ரோட்டில் சென்று கொண்டிருந்த கார் ஒன்று ஞாயிற்றுக்கிழமை காலை திடீரென தீ பிடித்து எரிந்தது.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த சிதம்பரம் தீயணைப்பு மீட்புத்துறையினர் விரைந்து சென்று தீயை முற்றிலும் அணைத்தனர். பின்னர் சம்பவ இடத்திற்கு காவல் துறையினர் சென்று விசாரணை மேற்கொண்டனர்.
இதையும் படிக்க: இலையுதிர்ந்த ஒரே வாரத்தில் துளிர்க்கும் 200 ஆண்டு அத்தி மரம்!
இந்த விசாரணையில், சிதம்பரம் அருகே உள்ள மீதிகுடியைச் சேர்ந்த வைத்தியநாதசுவாமி என்பவர் தனது பழைய காரை சீரமைத்து ஞாயிற்றுக்கிழமை காலை பரிசோதனை ஓட்டமாக ஓட்டிவந்த போது ஓபி மெயின் ரோட்டில் ஓட்டி வந்த பொழுது பெட்ரோல் கசிவு ஏற்பட்டு திடீர் தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.