தமிழ்நாடு

மேலப்பாளையத்தில் எஸ்டிபிஐ கட்சியினர் போராட்டம்

மேலப்பாளையத்தில் எஸ்டிபிஐ கட்சியினர் போராட்டத்தில்  ஈடுபட்டனர்.

DIN

திருநெல்வேலி: மேலப்பாளையத்தில் எஸ்டிபிஐ கட்சியினர் போராட்டத்தில்  ஈடுபட்டனர்.

திருநெல்வேலியில் எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வீட்டில் ஞாயிற்றுக்கிழமை காலை 4 மணி நேரத்திற்கும் மேலாக சோதனையில் ஈடுபட்டு வரும் தேசிய புலனாய்வு முகமை குழுவினர் வெளியேற வலியுறுத்தி எஸ்டிபிஐ கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தில் எஸ்டிபிஐ கட்சியின் மாவட்ட தலைவர் சாகுல் ஹமீது, பொதுச் செயலர் கனி, நிர்வாகி பர்கிட் அலாவுதீன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

விசாரணை நடைபெற்று வரும் நெல்லை முபாரக் வீட்டிற்குள் எஸ்டிபி கட்சியின் வழக்குரைஞர்களை அனுமதிக்க வேண்டும், எதிர்க்கட்சிகள் ஒன்றிணைவதைத் தடுக்க நினைக்கும் பாஜகவை கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

இது குறித்து எஸ்டிபி கட்சியின் நிர்வாகிகள் கூறுகையில், மேலப்பாளையத்தில் சுமார் 300 சதுர அடி மட்டுமே கொண்ட சிறிய இல்லத்தில் நெல்லை முபாரக் வசித்து வருகிறார். அவரது வீட்டில் 4 மணி நேரத்துக்கு மேலாக சோதனையிடுவதும், விசாரிப்பதும், அச்சுறுத்தும் வகையிலேயே உள்ளது. வழக்குரைஞர்கள் குழுவை கூட உள்ளே அனுமதிக்காதது, உள்நோக்கத்துடன் என்ஐஏ விசாரணைக்கு உத்தரவு போட்டிருப்பது போல தெரிகிறது என்று குற்றம் சாட்டினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மின்சாரம் பாய்ந்ததில் 3 மாடுகள் உயிரிழப்பு

நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தில் 47,525 போ் பயன்

‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கத்தை எதிா்த்தது ஆா்எஸ்எஸ்: காங்கிரஸ்

ராமநாதபுரம் அருகே திமுக பிரமுகா் வீடு மீது பெட்ரோல் குண்டுவீச்சு

மகாராஷ்டிர பேரவைத் தோ்தலில் 160 இடங்களில் வெற்றிக்கு உதவுவதாக அணுகிய இருவா்: சரத் பவாா் கருத்தால் பரபரப்பு

SCROLL FOR NEXT