தமிழ்நாடு

சுப்பிரமணிய சிவா நினைவு நாள்: வேளாண் அமைச்சர் மாலை அணிவித்து மரியாதை!

DIN

பென்னாகரம்: செய்தி மக்கள் தொடர்பு துறையின் சார்பில் விடுதலைப் போராட்ட தியாகி சுப்பிரமணிய சிவாவின் 98வது நினைவு தினத்தில் அவரின் திரு உருவப்படத்திற்கு மாநில வேளாண்மை உழவர் நலத் துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி பகுதியில் விடுதலைப் போராட்ட வீரர் சுப்பிரமணிய சிவா மண்டபத்தில் தருமபுரி செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் நடைபெற்ற 98 வது நினைவு நாள் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் மாநில வேளாண்மை மற்றும் உழவர் நலத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் கலந்து கொண்டு மலர்களால் அலங்கரிக்கப்பட்ட விடுதலைப் போராட்ட வீரர் தியாகி சுப்பிரமணிய சிவா நினைவிடம், நினைவுத்தூண் ஆகியவற்றிற்கு மாலை அணிவித்தும், திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். 

இதில் மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி, எம்எல்ஏக்கள் ஜி.கே.மணி (பென்னாகரம்), வெங்கடேஸ்வரன் (தருமபுரி),பென்னாகரம் வட்டாட்சியர் சௌகத் அலி, வட்டார வளர்ச்சி அலுவலர் ரேணுகா, மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு துறை அலுவலர் லோகநாதன், பாப்பாரப்பட்டி பேரூராட்சி தலைவர் பிருந்தா, செயல் அலுவலர் கோமதி, முன்னாள் எம்எல்ஏ தடங்கம் பெ. சுப்பிரமணி, முன்னாள் உயர் கல்வித் துறை அமைச்சர் பி.பழனியப்பன், மாநில வர்த்தக அணி துணை அமைப்பாளர் தர்மசெல்வன் மற்றும் ஏராளமானோர் கலந்துக் கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘தீராக் காதல்’ ஷிவதா...!

ரிசர்வ் வங்கி: புதிய செயல் இயக்குநர் நியமனம்!

கேஜரிவால் இன்று மாலை பிரசாரம் தொடங்குகிறார்!

பிரஜ்வல் ரேவண்ணா வழக்கில் உண்மை வெளிவரும்: சித்தராமையா நம்பிக்கை

‘குற்றம் கடிதல் 2’ திரைப்படம் அறிவிப்பு!

SCROLL FOR NEXT