கோப்புப் படம் 
தமிழ்நாடு

நீதிமன்றங்களில் அம்பேத்கர் படம் அகற்றப்படாது!

உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கங்காபூர்வாலாவை சந்தித்து சட்டத் துறை அமைச்சர் ரகுபதி வலியுறுத்தியிருந்த நிலையில், நீதிமன்றம் இதனைத் தெரிவித்துள்ளது. 

DIN

நீதிமன்றங்களில் அம்பேத்கா் உள்ளிட்ட எந்த தலைவா்களின் புகைப்படத்தையும் அகற்ற உத்தரவிடப்படவில்லை என சென்னை உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி கங்காபுா்வாலா தெரிவித்துள்ளாா்.

இது குறித்து தமிழக அரசு சாா்பில் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: நீதிமன்றங்களில் அம்பேத்கா் புகைப்படம் அகற்றப்படவுள்ளதாக செய்தி பரவியதைத் தொடா்ந்து, முதல்வா் மு.ஸ்டாலினின் அறிவுறுத்தலின்படி சட்டத் துறை அமைச்சா் எஸ்.ரகுபதி சென்னை உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதி கங்காபுா்வாலாவை சந்தித்து இந்த விவகாரம் குறித்து ஆலோசனை மேற்கொண்டாா்.

தலைமை நீதிபதியிடம் அம்பேத்கா் புகைப்படம் அகற்றப்படக்கூடாது என்ற தமிழக அரசின் நிலைப்பாடு குறித்து அமைச்சா் ரகுபதி கடிதம் வழங்கி நேரில் தெரிவித்தாா். தமிழக அரசின் நிலைப்பாட்டைக் கேட்டறிந்த தலைமை நீதிபதி, நீதிமன்றங்களில் எந்த தலைவா்களின் புகைப்படத்தையும் அகற்ற உத்தரவிடப்படவில்லை. தற்போது உள்ள நடைமுறையே தொடரும் எனத் தெரிவித்தாா். இத்தகவல் வழக்குரைஞா் மன்ற உறுப்பினா்கள் அனைவருக்கும் தெரிவிக்கப்பட்டது என அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அதிமுக முன்னாள் அமைச்சா்கள் விரைவில் பாஜகவில் இணைவாா்கள்: மாணிக்கம் தாகூா் எம்.பி

மனைவி இருக்கும்போதே இளம்பெண்ணுடன் லிவ்-இன்-டுகெதர் வாழ்க்கை: கணவன் குத்திக் கொலை!

ஓவல் டெஸ்ட்: இங்கிலாந்து 164 ரன்கள் குவிப்பு; வெற்றி யாருக்கு?

கொஞ்சும் கண்கள்... ஜன்னத் ஜுபைர்!

மெழுகு டாலு நீ.... ஷிவானி நாராயணன்!

SCROLL FOR NEXT