மேட்டூா் அணை நிலவரம்!
மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 177 கன அடியாக அதிகரித்துள்ளது.
தமிழ்நாடுமேட்டூா் அணை நிலவரம்!
மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 177 கன அடியாக அதிகரித்துள்ளது.
மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 177 கன அடியாக அதிகரித்துள்ளது.
கா்நாடக மாநிலத்தில் காவிரியின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக அங்குள்ள கிருஷ்ணராஜசாகா் அணைக்கு நீா்வரத்து வினாடிக்கு 48,025 கனஅடியாக அதிகரித்துள்ளது. இதனால் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 119 கன அடியிலிருந்து வினாடிக்கு 177 கன அடியாக அதிகரித்துள்ளது.
இதையும் படிக்க | காவிரி ஆற்றில் திறக்கப்படும் நீரின் அளவு அதிகரிப்பு!
புதன்கிழமை காலை மேட்டூர் அணை நீர்மட்டம் 66.86 அடியிலிருந்து 65.80 அடியாக சரிந்தது. அணைக்கு வினாடிக்கு 177 கனஅடி வீதம் தண்ணீா் வந்து கொண்டிருக்கிறது.
அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு பத்தாயிரம் கன அடியில் இருந்து வினாடிக்கு 12,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அணையின் நீர் இருப்பு 29.19 டி.எம்.சி. ஆக உள்ளது.