தமிழ்நாடு

செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் ஆக. 8 வரை நீட்டிப்பு!

DIN

அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சா் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவலை ஆகஸ்ட் 8 வரை நீட்டித்து சென்னை முதன்மை அமா்வு நீதிமன்றம் இன்று(புதன்கிழமை) உத்தரவிட்டது. 

சட்ட விரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமலாக்கத் துறையினரால் கடந்த ஜூன் 14-ஆம் தேதி அதிகாலை அமைச்சா் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். அப்போது நெஞ்சு வலி காரணமாக ஓமந்தூராா் அரசு பல்நோக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் காவேரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு அங்கு ஜூன் 21-ஆம் தேதி அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. 

செந்தில் பாலாஜி தற்போது நீதிமன்றக் காவலில் புழல் சிறையில் உள்ள நிலையில் அவரது காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இன்று, ஜூலை 26 ஆம் தேதியுடன் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் முடிவடையும் நிலையில் அவர் காணொளி மூலமாக நீதிபதி முன்பு ஆஜரானார். 

அதனைப் பதிவு செய்த சென்னை முதன்மை அமா்வு நீதிமன்ற நீதிபதி அல்லி, ஆகஸ்ட் 8 வரை செந்தில் பாலாஜியின் காவலை நீட்டித்து உத்தரவிட்டார்.

இதன் மூலமாக செந்தில் பாலாஜியின் காவல் 3வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

மேலும் செந்தில் பாலாஜி மனைவி தொடர்ந்த மேல்முறையீட்டு மனு உச்சநீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து வருகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாஜக ஆட்சியில் 10 ஆண்டுகளாக பாகுபாடு: அகிலேஷ்

அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் சேர மே 24 வரை விண்ணப்பிக்கலாம்

தாமதமானாலும் வாக்கு செலுத்தாமல் வீடு திரும்பாதீர்கள்: உத்தவ் தாக்கரே கோரிக்கை

மம்தா பானர்ஜியின் சகோதரர் பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லை!

5-ஆம் கட்ட தேர்தல்: ஜனநாயகக் கடமையாற்றிய சாமானிய மக்கள்!

SCROLL FOR NEXT