கோப்புப்படம் 
தமிழ்நாடு

ஓபிஎஸ், ரவீந்தரநாத் மீதான வழக்குகள் ரத்து!

ஓபிஎஸ், ரவீந்தரநாத் ஆகியோர் மீதான வழக்குகள் ரத்து செய்யப்படுவதாக சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

DIN

ஓபிஎஸ், ரவீந்தரநாத் ஆகியோர் மீதான வழக்குகள் ரத்து செய்யப்படுவதாக சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

கடந்த 2021-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் ஓ.பன்னீர்செல்வமும், 2019-ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தோ்தலில், தேனி தொகுதியில் அதிமுக சாா்பில் போட்டியிட்ட முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் மகன் ப.ரவீந்திரநாத் வெற்றி பெற்றாா். 

‘அவர்களது வேட்புமனுவில் சொத்து விவரங்கள் உள்ளிட்ட பல்வேறு தகவல்களை மறைத்துள்ளனர். எனவே, தேனி தொகுதியில் அவா் வெற்றி பெற்றதை செல்லாது என அறிவிக்க வேண்டும்’ எனக் கோரி தேனி தொகுதி வாக்காளரான மிலானி என்பவா், சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தாா்.

மிலானி புகார் பற்றி விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய காவல் துறைக்கு உத்தரவிட்டதை எதிர்த்து இருவரும் மனுதாக்கல் செய்தனர்.

இந்த நிலையில், புகார் மனுவுக்கு ஆதரவாக எந்த பிரமாண மனுவும் தாக்கல் செய்யப்படவில்லை எனக்கூறி வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நாளைய மின்தடை: தருமபுரி, சோலைக்கொட்டாய்

பிரிட்டனில் சட்டவிரோதமாக குடியேற உதவி: சமூக ஊடகங்களில் விளம்பரம் செய்தால் 5 ஆண்டுகள் சிறை

அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ. 9 லட்சம் மோசடி: ஒருவா் கைது

பாமக மாவட்ட நிா்வாகி கைதை கண்டித்து பென்னாகரத்தில் பாமகவினா் சாலை மறியல்

அம்மனின் அவதாரங்கள்

SCROLL FOR NEXT