ஹரிபத்மன் 
தமிழ்நாடு

கலாஷேத்ரா விவகாரம்: இன்று குற்றப்பத்திரிகை தாக்கல்!

சென்னை கலாஷேத்ரா கல்லூரி பாலியல் புகார்கள் தொடர்பான வழக்கில் இன்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவுள்ளது.

DIN

சென்னை: சென்னை கலாஷேத்ரா கல்லூரி பாலியல் புகார்கள் தொடர்பான வழக்கில் இன்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவுள்ளது.

சென்னை திருவான்மியூரில் கலாஷேத்ரா அறக்கட்டளையின் கீழ் இயங்கி வரும் ருக்மணிதேவி நுண்கலைக் கல்லூரியில் பயிலும் மாணவிகள் பலருக்கும் அங்குப் பணியாற்றும் நான்கு ஆசிரியர்கள் கடந்த 10 ஆண்டுகளாகப் பாலியல் தொல்லை அளித்து வந்துள்ளதாக கூறியும், சம்மந்தப்பட்ட ஆசிரியர்களை கைது செய்ய வலியுறுத்தியும் மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து 2015 முதல் 2019 ஆம் ஆண்டு வரை கலாஷேத்ரா கல்லூரியில் படித்த முன்னாள் மாணவி ஒருவர் சென்னை அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில், பேராசிரியர் ஹரிபத்மன் மீது, பாலியல் அத்துமீறல் குறித்து புகார் மனு ஒன்றை அளித்தார். இந்த புகார் குறித்து விரிவான விசாரணை நடத்தப்பட்டு ஹரிபத்மன் மீது 3 பிரிவுவுகளின் கீழ் வழக்குப் பதிந்து போலீசார் கைது செய்தனர்.

இதனைத் தொடர்ந்து, கடந்த ஜூன் மாதம் ஹரிபத்மனுக்கு ஜாமீன் வழங்கி சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில், 50-க்கும் மேற்பட்ட மாணவிகளிடம் மகளிர் போலீசார் விசாரணை மேற்கொண்டு விவரங்களை சேகரித்த நிலையில், இன்று சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சோளிங்கரில் கேட்பாரற்று கிடந்த குழந்தை மீட்பு

மழை வருமோ... ராதிகா கௌஷிக்!

தீவிரமடையும் நெல் அறுவடைப் பணிகள்

உங்களை உணரும் கலை... தீப்தி சுனைனா!

ஹூண்டாய் புதிய வென்யூ கார் அறிமுகம் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT