தமிழ்நாடு

பருத்தி விலை குவிண்டாலுக்கு ரூ. 450 உயர்வு 

DIN

வெள்ளக்கோவில்: திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவிலை அடுத்த மூலனூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் பருத்தி விலை கடந்த வாரத்தை விட குவிண்டாலுக்கு ரூ. 450 உயர்ந்தது. 

இங்கு வாரந்தோறும் வியாழக்கிழமை பருத்தி ஏலம் நடைபெற்று வருகிறது. இந்த வாரம் வரத்து அதிகமாக இருந்ததால் வெள்ளிக்கிழமை காலை வரை ஏலம் நீடித்தது. 

கோவை, திருப்பூர், ஈரோடு, திருச்சி, கரூா், திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 726 விவசாயிகள் தங்களுடைய 8,051 பருத்தி மூட்டைகளை விற்பனை செய்ய கொண்டு வந்திருந்தனர். மொத்த வரத்து 2,491 குவிண்டால். 

திருப்பூர், ஈரோடு, சேலம், கோவை மாவட்டங்களைச் சேர்ந்த 25 வணிகர்கள் வந்திருந்தனர். விலை குவிண்டால் ரூ. 6,650 முதல் ரூ. 7,789 வரை விற்பனையானது. சராசரி விலை ரூ. 7,200. கடந்த வார சராசரி விலை ரூ. 6,750.

விற்பனைக் கூட ஏல ஏற்பாடுகளை திருப்பூர் விற்பனைக்குழு செயலாளர் சுரேஷ்பாபு, விற்பனைக்கூட கண்காணிப்பாளர் சிவக்குமார் செய்திருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தெலங்கானாவில் ஓட்டு கேட்க பிரதமர் மோடிக்கு உரிமை இல்லை: முதல்வர் ரேவந்த் ரெட்டி

இந்தியன் - 28!

சவுக்கடியுடன் 8 ஆண்டுகள் சிறைத் தண்டனை பெறும் ஈரானிய இயக்குநர்!

டி20 போட்டிகளில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் புதிய சாதனை!

ஹரியாணாவில் பாஜக ஆட்சிக்கு சிக்கல்: நம்பிக்கை வாக்கெடுப்பு கோரி கடிதம்

SCROLL FOR NEXT