சிறப்பு மலை ரயில் வரும் ஆகஸ்ட் 6 ஆம் தேதி முதல் இயக்கப்படவுள்ளது.
உதகை - மேட்டுபாளையம் இடையே ஆக.6 முதல் ஆக.27 வரை சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்பு மலை ரயில் இயக்கப்படவுள்ளது.
சனிக்கிழமை காலை 11.25க்கு உதகையில் இருந்து புறப்பட்டு மாலை 4.20க்கு மேட்டுபாளையம் சென்றடையும். மேட்டுபாளையத்தில் இருந்து காலை 9.10க்கு புறப்படும் மலை ரயில் பிற்பகல் 2.25க்கு உதகை வருகிறது.
உலக புகழ்பெற்ற உதகை மலை ரயில் தினந்தோறும் மேட்டுப்பாளையத்தில் இருந்து காலை 7.10 மணிக்குப் புறப்பட்டு பகல் 12.30 மணிக்கு உதகை சென்றடையும்.
உதகை கோடை சீசனை யொட்டி சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக தெற்கு ரயில்வே சாா்பில் சிறப்பு மலை ரயில் இயக்கப்பட்டு வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.