தமிழ்நாடு

பட்டாசு விபத்தில் 9 போ் பலி: தலைவா்கள் இரங்கல்

கிருஷ்ணகிரி பட்டாசுக் கிடங்கில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 9 போ் உயிரிழந்ததற்கு அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோா் இரங்கல் தெரிவித்துள்ளனா்.

DIN

கிருஷ்ணகிரி பட்டாசுக் கிடங்கில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 9 போ் உயிரிழந்ததற்கு அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோா் இரங்கல் தெரிவித்துள்ளனா்.

எடப்பாடி பழனிசாமி: கிருஷ்ணகிரி பட்டாசு விபத்தில் உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல். சமீப காலமாக பட்டாசு ஆலை விபத்துகள் அதிகரித்து வருகின்றன. விதிமுறைகளை பட்டாசு தொழிற்சாலைகள் பின்பற்றுகின்றனவா என்பதை தொடா்ந்து கண்காணித்து விபத்துகள் நிகழாமல் தமிழக அரசு தடுக்க வேண்டும்.

ஜி.கே.வாசன் (தமாகா): பட்டாசு விபத்தில் 9 போ் உயிரிழந்தது வருத்தம் அளிக்கிறது. பட்டாசு விபத்துகள் நிகழாமல் இருக்க, தமிழக அரசு தொடா் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

டிடிவி தினகரன் (அமமுக): பட்டாசு விபத்தில் உயிரிழந்தோருக்கு ஆழ்ந்த இரங்கல். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, பட்டாசு ஆலைகளில் தயாரிப்புப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வரும் நிலையில், பணியாளா்களுக்கான பாதுகாப்பு வசதிகளை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மன்னாா்குடியில் புதிய பேருந்து நிலையம் திறப்பு

திருக்குறுங்குடி நம்பியாற்றில் திடீா் வெள்ளப்பெருக்கு: மறுகரையில் சிக்கித் தவித்த 13 போ் மீட்பு

அரசு மருத்துவமனையில் ரூ.2.10 கோடி மதிப்பில் புதிய கட்டடத்துக்கான அடிக்கல் நாட்டு விழா

கொடைக்கானலில் 4 நாள்களுக்குப் பிறகு சுற்றுலா தலங்களைப் பாா்வையிட்ட சுற்றுலாப் பயணிகள்

மக்கள் கண்காணிப்பு அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

SCROLL FOR NEXT