தேசிய நெடுஞ்சாலையின் சாலை தடுப்பில் மோதி விபத்துக்குள்ளான கார்  
தமிழ்நாடு

வேப்பூர் அருகே கார் கவிழ்ந்த விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலி!

கடலூர் மாவட்டம், வேப்பூர் அருகே திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கார் கவிழ்ந்த விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலியாகினர்.

DIN

நெய்வேலி: கடலூர் மாவட்டம், வேப்பூர் அருகே திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கார் கவிழ்ந்த விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலியாகினர்.

வேப்பூர் அருகே திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சாலையின் தடுப்பில் கார் மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த ஒரு வயது பெண் குழந்தை ஜெனிலியா, தந்தை அஜித், மனைவி மதுமிதா என 3 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். பலத்த காயமடைந்த மாமியார் தமிழ்செல்வி உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது மருத்துவமனையில் உயிரிழந்தார். 

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வேப்பூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பியூன் வேலை: பிஎச்டி, எம்பிஏ உள்பட 24.76 லட்சம் இளைஞர்கள் விண்ணப்பம்!

கோவை: கிணத்தைக் காணோம் வடிவேலு காமெடி பாணியில் இல்லாத வீட்டுக்கு வரி!

துல்கர் சல்மான் - 41 படத்தின் படப்பிடிப்பு துவக்கம்!

தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்தும் பக்தர்கள்!

வரம் நீ... அர்ச்சனா கௌதம்

SCROLL FOR NEXT