தமிழ்நாடு

உதகையில் அறுவடைத் திருவிழாவை கொண்டாடிய படுகர் இன மக்கள்

உதகையில் நடைபெற்ற மலைவாழ் மக்களின் அறுவடைத் திருவிழாவில் 14 கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான படுகர் இன மக்கள் பாரம்பரிய உடையணிந்து கொண்டாடினர்.

DIN

உதகையில் நடைபெற்ற மலைவாழ் மக்களின் அறுவடைத் திருவிழாவில் 14 கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான படுகர் இன மக்கள் பாரம்பரிய உடையணிந்து கொண்டாடினர்.

இயற்கை எழில் கொஞ்சும் நீலகிரி மாவட்டத்தில் உள்ள மலை கிராமங்களில் பாரம்பரிய கலாச்சாரத்துடன் வாழ்ந்து வருபவர்கள் படுகர் மக்கள். இவர்கள்  விளைவிக்கக் கூடிய கேரட், பீட்ரூட், உருளைக்கிழங்கு, சவ்சவ், போன்ற மலை தோட்டக் காய்கறிகளை அறுவடை செய்யும், நிகழ்வை தெய்வப்பா எனப்படும் அறுவடைத் திருவிழாவாக கொண்டாடப்படுவது வழக்கம். 

அதன்படி உதகை அருகே உள்ள கேத்தி ,கொரடா என்ற கிராமத்தில் 14 கிராமங்களைச் சேர்ந்த படுகர் இன மக்கள் தங்களின் பாரம்பரிய உடைகளான வெண்ணிற உடைகளை அணிந்து அறுவடை திருவிழாவில் உற்சாகத்துடன் பங்கேற்றனர். 

தாங்கள் அறுவடை செய்த காய்கறிகளை கோயிலில் சிறப்பு பூஜை செய்து ஆடிப் பாடி மகிழ்ந்தனர். இந்த விழாவில் 14 கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக் கணக்கானோர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

யானைத் தந்தங்களை விற்க முயன்ற 5 போ் கைது!

சென்னை கிராண்ட்மாஸ்டா்ஸ்: 3-ஆவது சுற்றில் அா்ஜுன் எரிகைசி, விதித், கீமா், பிரனேஷ் வெற்றி

5% வளா்ச்சி கண்ட உள்நாட்டு வாகன விற்பனை

இலங்கைக் கடற்படையினரால் ராமேசுவரம் மீனவா்கள் 7 போ் கைது!

மின்சாரம் பாய்ந்ததில் 3 மாடுகள் உயிரிழப்பு

SCROLL FOR NEXT