முதல்வர் மு.க. ஸ்டாலின் (கோப்புப் படம்) 
தமிழ்நாடு

பெண்கள் கல்வி கற்கத் தடை இருக்கக்கூடாது: மு.க. ஸ்டாலின்

சென்னை கொளத்தூரில் ரூ.6.32 கோடியில் புதிய வகுப்பறை கட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். 

DIN

பெண்கள் கல்வி கற்க எந்தத் தடையும் இருக்கக்கூடாது என முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

சென்னை கொளத்தூரில் அகரம் மார்க்கெட் தெருவில் உள்ள மேல்நிலைப் பள்ளியில், ரூ.6.32 கோடி மதிப்பில் 3 தளங்களுடன் கூடுதல் வகுப்பறைகள் கட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். 

பின்னர், கொளத்தூர் தொகுதியில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

அதனைத் தொடர்ந்து பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், பெண்கள் கல்வி கற்க எந்தத் தடையும் இருக்கக்கூடாது. கல்வி எளிமையாக கிடைத்துவிடவில்லை. கல்விதான் நம் தலைமுறையையே உயர்த்துவதற்கான அச்சாரம். இதனால் திமுக ஆட்சியில் கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. 

பெண்கள் கல்வி கற்க வேண்டியது மிக அவசியம். அதனால், அதில் எந்தத் தடையும் இருக்கக்கூடாது. புதுமைப் பெண் திட்டம் என்ற பெயரில் உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்பட்டு வருகிறது.

நான் மாநிலத்துக்குத்தான் முதல்வர். கொளத்தூருக்கு எம்.எல்.ஏ.தான். எவ்வளவு பணி இருந்தாலும் கொளத்தூர் தொகுதி மக்களை வந்து பார்க்கும் போதுதான் ஒரு ஆற்றல் பிறக்கிறது எனக் குறிப்பிட்டார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மேட்டூர் அணை நீர்வரத்து சரிவு!

இந்தியாவுடன் தீவிர வர்த்தகப் பேச்சு - வெள்ளை மாளிகை தகவல்

என்னை யாரும் இயக்கவில்லை: செங்கோட்டையன் பேட்டி

நியூயார்க் மேயராக முதல் இந்திய வம்சாவளி தேர்வு! யார் இவர்?

பாமக எம்எல்ஏ அருள் மீது தாக்குதல்! 20 பேர் மீது வழக்கு!

SCROLL FOR NEXT