தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்தது!
சென்னையில் ஒரு சவரன் தங்கம் விலை ரூ.120 குறைந்து விற்பனை செய்யப்படுகிறது.
சென்னையில் ஒரு சவரன் தங்கம் விலை ரூ.120 குறைந்து விற்பனை செய்யப்படுகிறது.
தங்கம் விலை உயர்வதும், குறைவதும் அவ்வப்போது நிகழ்ந்து வரும் ஒன்றாக இருந்தாலும், கடந்த ஏப்ரலில் இருந்தே தொடர்ந்து ஏற்றத்துடன் இருந்து வருகிறது.
அதன்படி, சென்னையில் இன்று காலை நிலவரப்படி ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.120 குறைந்து, ரூ.44,400-க்கும், ஒரு கிராம் ரூ.15 குறைந்து, ரூ.5,550-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
அதேசமயம், வெள்ளி விலை நேற்றைய விலையில் நீடிக்கின்றது. அதன்படி ஒரு கிராம் ரூ.80.00-க்கும், கட்டி வெள்ளி ஒரு கிலோ ரூ.80,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.