சென்னை: புது தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் இன்று பிற்பகலில் தில்லியிலிருந்து சென்னை வந்துள்ளார். அவர் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலினை சந்திக்கவுள்ளாா்.
அரவிந்த் கேஜரிவாலுடன் பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் உள்ளிட்டோரும் சென்னை வந்துள்ளனர். சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று மாலை 5 மணியளவில் இந்தச் சந்திப்பு நடைபெற உள்ளதாகக் கூறப்படுகிறது.
தில்லி மாநில அரசின் நிா்வாக அதிகாரத்தைப் பறிக்கும் வகையில் மத்திய அரசால் அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டதற்கு எதிராக குரல் கொடுக்குமாறு பிற மாநில முதல்வா்கள் மற்றும் அரசியல் கட்சித் தலைவா்களை அரவிந்த் கேஜரிவால் சந்தித்து வலியுறுத்தி வருகிறாா்.
மாநில அரசுகளின் ஆதரவை திரட்டும் வகையில், அவரது சென்னை பயணம் அமைந்துள்ளது.
பிகாா் முதல்வா் நிதீஷ்குமாா், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலா் சீதாராம் யெச்சூரி உள்ளிட்டோரை ஏற்கெனவே அவா் சந்தித்துள்ளாா். அதைத் தொடா்ந்து தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலினை இன்று சந்திக்கிறார். இந்த சந்திப்பு அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.