தமிழ்நாடு

ஒடிசா ரயில் விபத்தில் தமிழர்கள் யாருக்கும் உயிரிழப்பில்லை: மா.சுப்ரமணியன் பேட்டி

DIN

ஒடிசா மாநிலத்தில் நேருக்கு நேர் ரயில் மோதி விபத்தில் குறித்து தமிழகத்தை சேர்ந்த நபர்களுக்கு யாருக்கும் உயிரிழப்பு இல்லை. தமிழக அரசு கண்காணிப்பு பணியில் உள்ளதாகவும் தற்போது 8 பேர் கொண்ட நபர்களுக்கு காயம் ஏற்பட்டு உள்ளதாக சுகாதார துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் பேட்டியளித்துள்ளார். 

மாசு சுப்ரமணியன், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை அமைச்சர் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது: 

தமிழக முதல்வர் அவர்கள் சுகாதார துறையிலும் பேரிடர் அமைச்சர் ஆகிய இருவரும் சென்னை சென்ட்ரலில் ஒடிசா மாநிலத்தில் விபத்தில் சிக்கிய அவர்களை விசாரிக்க கோரியும் உத்தரவிட்ட பேரில் நேற்று முன்தினம் ஒடிசா மாநிலத்தில் தமிழகத்தில் வரக்கூடிய ரயில்  மோதி விபத்து குறித்து ஒடிசா மாநிலத்திற்கு  தமிழக அமைச்சர்கள் நேரடியாக சென்று விசாரித்து கொண்டு உள்ளார்கள். இன்று அதிகாலை முதல் ஒடிசா மாநிலம் ரயில் விபத்தில் சிக்கி உள்ள ரயில்  பயணிகளை சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் வரவழைத்து விபத்தில் சிக்கியவர்களின் விபத்து காயங்கள் குறித்தும் நலம் விசாரித்துள்ளார்கள். 

ரயில் பயணிகளுக்கு விபத்தில் சிக்கிய நபர்களுக்கு உரிய சிகிச்சைக்கான அனைத்து உபகரங்களும் தயாராக உள்ளது. முன்னெச்சரிக்கையாக சிகிச்சைக்கான மருத்துவ சிகிச்சை குறித்து, ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை ,கே எம் சி கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை, ஓமந்தூரார் அரசு மருத்துவமனை, ஸ்டான்லி மருத்துவமனை, இராயப்பேட்டை  மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்கு 6  மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை பெற 207 சிறப்பு பெட் வசதிகள் தயாரான நிலையில்  உள்ளது. மேலும், கிரின் வார்ட் 205 பெட் வசதிகள் செய்யப்பட்டுள்ளது. 

தற்போது வரை ஒடிசா மாநிலத்தில் விபத்தில் ரயில் பயணிகளுக்கு ஏற்பட்ட விபத்து குறித்து தமிழர்களைச் சேர்ந்த நபர்களுக்கும் எந்த ஒரு உயிர் இழப்பு ஏற்படவில்லை என்றும் தகவல் வந்துள்ளது. 

தற்போது 8 பயணிகளுக்கு மட்டுமே விபத்துக்களில் சிக்கி காயங்கள் ஏற்பட்டுள்ளது. அதற்கான உரிய ஏற்பாடுகள் மருத்துவ ரீதியில் செயல்பட்டு உள்ளதாகவும் ஒடிசா மாநிலத்தில் இருந்து 294 பேர்கள் வந்தவர்கள் அதில் ஒரு சிலர் இறங்கி விட்டனர் என்றும் மீதி உள்ளவர்கள் 137 பேர் வந்தடைந்தவர்களில் 8 பேர்களுக்கு காயம் அடைந்து உள்ளார்கள். அதில் ஒருவர் கேரளா மாநிலத்தை சேர்ந்தவர். ஒருவர் கார்த்திகேயன் என்பவர் தமிழ் நாட்டை சேர்ந்தவர் ஒரு சிலர் வெவ்வேறு இடத்தை சேர்ந்தவர்கள் என்றும் மருத்துவம் சிகிச்சை பெற்று வருகிறார்கள். பதிக்கப்பட்ட ஒரு பெண்மணி இஸ்லாமிய பெண் மற்றும் உடன் இருந்த 4 பேரும் வேறுவேறு சிகிச்சை பெற்ற வந்தவர்கள். அவர்களுக்கும் உரிய சிகிச்சை வழங்க பட உள்ளது. மேலும் விமான நிலையத்திலும் அங்கும் மருத்துவர்கள் குழு தயார் நிலையில் உள்ளனர். தமிழகத்தை சேர்ந்த நபர்களுக்கு உயிர் பாதிப்பு இல்லை. தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்ரீநகரில் பல்வேறு சமூக பிரதிநிதிகளுடன் அமித் ஷா சந்திப்பு

ராமர் என் பக்கம் என்கிறார் சமாஜ்வாதி வேட்பாளர்!

சென்னையில் இன்றும் மழை பெய்யும்!

ராஷ்மிகாவின் பதிவினை பகிர்ந்து பிரதமர் மோடி கூறியதென்ன?

தங்கம் விலை: பவுனுக்கு ரூ.200 குறைவு

SCROLL FOR NEXT