தர்கா கந்தூரி விழாவில் பல்லாயிரகணக்கானோர் பங்கேற்று வழிபாடு செய்தனர். 
தமிழ்நாடு

சீர்காழி அருகே தர்கா கந்தூரி விழா: லண்டன், துபை உள்ளிட்ட வெளிநாட்டினர் பங்கேற்பு

சீர்காழி அருகே இறைதூதர் நபிகள் நாயகத்தின் வம்சா வழியினர் வழிபாடான சையது யாசின் மௌலானா தர்கா கந்தூரி விழாவில் லண்டன், துபை உள்ளிட்ட வெளி நாட்டினர் உள்பட  பல்லாயிரகணக்கானோர் பங்கேற்றனர்.  

DIN


சீர்காழி: சீர்காழி அருகே இறைதூதர் நபிகள் நாயகத்தின் வம்சா வழியினர் வழிபாடான சையது யாசின் மௌலானா தர்கா கந்தூரி விழாவில் லண்டன், துபை உள்ளிட்ட வெளிநாட்டினர் உள்பட  பல்லாயிரகணக்கானோர் பங்கேற்றனர்.  

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழியை அடுத்த திருமுல்லைவாசலில் இஸ்லாமியர்களின் இறை தூதர் நபிகள் நாயகத்தின் வம்சா வழி பேரன் ஜமாலியா சையது யாசின் மவுலானா தர்கா அமைந்துள்ளது. தமிழகம் மற்றும் இலங்கை வாழ் இஸ்லாமியர்களின் ஆன்மீக குருவாக விளங்கிய இவர் இந்தியா மற்றும் கீழ்திசை நாடுகளில் இஸ்லாமிய ஆன்மீகத்தை பரப்பியவர். இறுதியாக மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி  அருகே உள்ள திருமுல்லைவாசலில் 1964 ஆம் ஆண்டு நல்லடக்கம் செய்யப்பட்டார். அங்கு அவருக்கு தர்க்கா அமைத்து வழிபட்டு வருகின்றனர். 

ஆண்டு தோறும் யாசின் மெளலானா இறையடி சேர்ந்த நாளான கந்தூரி விழா நடைபெறவது வழக்கம். அதன்படி இன்று இரவு நடைபெற்ற விழாவில் தஞ்சை, சென்னை, புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்கள் பல்வேறு மாநிலங்களில் இருந்தும், இலங்கை, லண்டன், துபை உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்தும் மௌலானவின் கலிபாக்கள், சீடர்கள், பக்தர்கள் கலந்துகொண்டனர். 

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சந்தனக்கூடு வைபவம் இன்று விமர்சையாக நடைபெற்றது. சந்தன குடம் ஊர்வலமாக எடுத்துவரப்பட்டு சையது மௌலானா சமாதியில் சந்தனம் பூசும் வைபவம் நடைபெற்றது. 

அதனைத் தொடர்ந்து சிறப்புத்துவா ஓதி வழிபாடு நடைபெற்றது. மேலும் மத நல்லினக்கத்தையும் ஒற்றுமையையும்  வெளிபடுத்தும் விதமாக அனைத்து மதங்களையும் சேர்ந்தவர்கள் உள்பட பல்லாயிரகணக்கானோர் பங்கேற்று வழிபாடு செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புதிய பிரதமர் அலுவலகம் ‘சேவா தீர்த்’ தயார்: 1947-க்கு பின் முதல்முறையாக இடமாற்றம்!

சிறையில் காலமானார் வங்கதேச பாடகர் புரோலாய் சாகி

எச்.சி.எல் 3வது காலாண்டு நிகர லாபம் 11% சரிவு!

உ.பி. அணிக்கு எதிரான போட்டி: ஆர்சிபி பந்து வீச்சு!

சில்லறைப் பணவீக்கம் 1.33% ஆக உயர்வு

SCROLL FOR NEXT