சென்னை: திரைப்பட துணை நடிகர் பழனியப்பன் என்பவர் குடிபோதையில் கார் ஓட்டி இருசக்கர வாகனம் மீது மோதிய விபத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர் சம்பவ இடத்திலேயே பலியானர்.
இந்த விபத்து நடந்த இடத்தில் பதிவான சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.
சென்னை கே.கே. நகர் அருகே உள்ள ஆற்காடு சாலையில் நேற்று இரவு கார் ஒன்று வேகமாக சென்று கொண்டிருந்தது. அப்போது முன்னாள் சென்று கொண்டிருந்த இருசக்கர வாகனத்தை பயங்கரமாக மோதியது. இதில் இருசக்கர வாகனம் தூக்கி வீசப்பட்டது. இதில், இருசக்கர வாகனம் ஓட்டிவந்த இளைஞர் சம்பவ இடத்திலேயே பலியானார்.
தகவல் அறிந்து வந்த போக்குவரத்து புலனாய்வு போலீசார் நடத்திய விசாரணையில் கார் ஓட்டிய நபர் திரைப்படத்துறையில் துணை நடிகராக இருக்கும் பழனியப்பன் என்பதும் குடிபோதையில் இருந்த பழனியப்பன் அதிவேகமாக கார் ஓட்டியதில் விபத்து ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.
விபத்தில் பலியான நபர் சென்னை மதுரவாயில் தனலட்சுமி தெருவை சேர்ந்த கதிரவன் என்பவரின் மகன் சரண்ராஜ் என்பதும் ஆற்காடு சாலையிலிருந்து மதுரவாயிலுக்கு செல்லும் போது விபத்து ஏற்பட்டு உயிரிழந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
குடிபோதையில் வாகனம் ஓட்டிய திரைப்பட துணை நடிகர் பழனியப்பனை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.