தமிழ்நாடு

ஃப்ரீ பையர் கேமில் ரூ.36 லட்சம் செலவிட்ட மகனால் அதிர்ந்து போன தாய்

இந்திய பெற்றோர், இன்னமும் பிள்ளைகளை கண்காணிக்கும் பணியில் மேம்பட வேண்டும் என்பதையே இந்த செய்தி காட்டுகிறது.

DIN


இந்திய பெற்றோர், தங்கள் பிள்ளைகளை கண்காணிக்கும் பணியில் இன்னமும் மேம்பட வேண்டும் என்பதையே இந்த செய்தி காட்டுகிறது.

ஹைதராபாத்தைச் சேர்ந்த பெண்ணின் வங்கிக் கணக்கில் தற்போது ஒரு ரூபாய் பணம் கூட இல்லை. அவரது வங்கிக் கணக்கிலிருந்த 36 லட்சம் ரூபாயை, அவரது மகன் ஃப்ரீ பையர் கேம் விளையாட செலவிட்டிருப்பது, ஒட்டுமொத்த பணமும் காலியான பிறகே தாய்க்குத் தெரிய வந்திருக்கிறது.

தொடர்ந்து செல்லிடப்பேசியில் ஃப்ரீ பையர் கேம் விளையாடி வந்த மகன், ஒவ்வொரு முறையும் ரூ.1.45 லட்சம் முதல் ரூ.2 லட்சம் வரை கேமுக்காக பணத்தை பரிமாற்றம் செய்திருப்பதும், வங்கியிலிருந்து தகவலாகக் கிடைத்திருக்கிறது.

ஹைதராபாத்தின் அம்பெர்பெட் பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுவன், தனது தாத்தாவின் கைப்பேசியில் ஃப்ரீபையர் கேமை பதவிறக்கம் செய்து விளையாடி வந்துள்ளான். பிறகு, நாளாக நாளாக, அடுத்தக்கட்டத்துக்குச் செல்ல ரூ.1,500 எனத் தொடங்கி, 10,000 ரூபாயாக அதிகரித்து பிறகு ஒரே பணப்பரிமாற்றத்தில் ரூ.2 லட்சம் வரை செலவிட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

விளையாட்டில் தங்களது திறனையும், கருவிகளையும் வாங்க என்று இந்த கேம் மூலம் சிறார்களிடமிருந்து பணம் பறிக்கப்படுவது வாடிக்கையாகியிருக்கிறது. சுமார் 36 லட்சம் வரை தனது வங்கிக் கணக்கிலிருந்து பணம் கொஞ்சம் கொஞ்சமாக கேமுக்கு செலவிடப்பட்டிருப்பதை அறியாமலேயே சிறுவனின் தாய் இருந்திருக்கிறார். ஒட்டுமொத்த பணமும் காலியான பிறகே, அவரது பரிதாப நிலை தெரிய வந்திருக்கிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிகார் தேர்தல்: காட்டாட்சிக்கு எதிராக பெண்கள் - பிரதமர் மோடி

வெண் மேகமே... கரிஷ்மா டன்னா!

பிக்-பாஸ் தொடரில் இருந்து ரவிச்சந்திரன் அஸ்வின் விலகல்!

பிகாரில் ஆட்சிக்கு வந்தால் பொங்கல்தோறும் மகளிருக்கு ரூ.30,000: தேஜஸ்வி

தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி தொடங்கியது! | SIR | EC

SCROLL FOR NEXT