சிதம்பரம்: தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு உத்தரவின்படி, சிதம்பரம் வட்ட சட்டப் பணிகள் குழுவின் சார்பாக சிறப்பு மக்கள் நீதிமன்றம் நிலுவையில் உள்ள வழக்குகளை சமரசமாக முடிப்பதற்காக சிதம்பரம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.
சிறப்பு அமர்வுக்கு வட்ட சட்டப் பணிகள் குழு தலைவரும், சார்பு நீதிபதியுமான அ.உமா மகேஸ்வரி தலைமை வகித்தார். கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதித்துறை நடுவர் சுகன்யா ஸ்ரீ முன்னிலை வகித்தார்.
சிறப்பு மக்கள் நீதிமன்றத்தில் வழக்குரைஞர்கள் சங்கத் தலைவர்கள் கே.வி.மோகனசுந்தரம், ராமகிருஷ்ணன் மற்றும் வழக்குரைஞர்கள் பங்கேற்றனர். மக்கள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளுக்கு விபத்து காப்பீடாக ரூ.22,73,000/- வழங்கி தீர்வு காணப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.