தமிழ்நாடு

சேலத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலை திறப்பு

சேலம் அண்ணா பூங்கா வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள முன்னாள் முதல்வர்  மு.கருணாநிதியின் சிலையை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

DIN

சேலம் அண்ணா பூங்கா வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள முன்னாள் முதல்வர்  மு.கருணாநிதியின் சிலையை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

சேலம் மாநகராட்சி அண்ணா பூங்கா வளாகத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு 1,713 சதுரடி பரப்பில் 4 அடி உயரத்தில் பீடமும், 16 அடி உயரத்தில் முழு உருவ வெண்கலச் சிலை நிறுவப்பட்டுள்ளது. 

கருணாநிதியின் முழு உருவ வெண்கலச் சிலையை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இதையடுத்து கருணாநிதி சிலைக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

இந்நிகழ்ச்சியில் நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன், நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு, எம்.பி எஸ்.ஆர்.பார்த்திபன், எம்.எல்.ஏ ராஜேந்திரன், மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன்,  உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

காரைக்குடி பகுதியில் நாளை மின்தடை

ஊராட்சித் துறை ஓய்வூதியா்கள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

பெரியாா் பல்கலை.யில் சா்வதேச கருத்தரங்கு, வணிகக் கண்காட்சி

தொழில் கடன் பெறுவதற்கு பெண்கள் விண்ணப்பிக்கலாம்

பழனி தைப்பூசத் திருவிழா: 892 இடங்களில் கண்காணிப்பு கேமரா

SCROLL FOR NEXT