தமிழ்நாடு

சௌகார்பேட்டை தனியார் வணிக வளாகத்தில் பயங்கர தீ விபத்து

சென்னை சௌகார்பேட்டை மின்ட் பகுதியில் உள்ள தனியார் வணிக வளாகத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. 

DIN



சென்னை: சென்னை சௌகார்பேட்டை மின்ட் பகுதியில் உள்ள தனியார் வணிக வளாகத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. 

சென்னை சௌகார்பேட்டை மின்ட் பகுதியில் உள்ள தனியார் வணிக வளாகம் அருகே உள்ள டிரான்ஸ்பார்மர் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இந்த தீ அருகில் உள்ள துணிக்கடைகளுக்கு பரவியது. 

இதுகுறித்து தீயணைப்பு நிலையங்களுக்கு தகவல் அளிக்கப்பட்டது. 

தகவல் அறிந்து 6 தீயணைப்பு வாகனங்களுடன் வந்த தீயணைப்பு வீரர்கள் வணிக வளாகத்தில் ஏற்பட்டுள்ள தீயை போராடி அணைத்தனர். 

இந்த தீ விபத்தில் வணிக வளாகத்தில் உள்ள பத்துக்கும் மேற்பட்ட துணிக்கடைகளில் உள்ள ஆடைகள் எரிந்து நாசமானது. 

இந்த தீ விபத்தால் அந்த பகுதி புகை மண்டலமாக காட்சியளித்தது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தொழிலாளா் வருங்கால வைப்புநிதி விவகாரம்: தற்காலிக தூய்மைப் பணியாளா்கள் பணி புறக்கணிப்பு வாபஸ்

ஜன் சுராஜ் கட்சி ஆட்சிக்கு வந்தால் பிகாரில் மீண்டும் மது விற்பனை: உதய் சிங் அறிவிப்பு

சிரிப்பாலே சாய்த்தாளே... அஞ்சலி தாத்ரி!

கோப்பையிலே என் குடியிருப்பு... செளந்தர்யா ரெட்டி!

மெல்லச் சிரித்தாள்... லாவண்யா!

SCROLL FOR NEXT