தலைமை செயலகத்திலுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி அறை 
தமிழ்நாடு

செந்தில் பாலாஜி அறையில் அமலாக்கத் துறை சோதனை முடிவு

சென்னை தலைமை செயலகத்திலுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி அறையில் நடைபெற்று வந்த அமலாக்கத் துறை சோதனை முடிந்தது. சுமார் 3 மணிநேரம் சோதனை நடைபெற்றது. 

DIN


சென்னை தலைமை செயலகத்திலுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி அறையில் நடைபெற்று வந்த அமலாக்கத் துறை சோதனை முடிந்தது. சுமார் 3 மணிநேரம் சோதனை நடைபெற்றது. 

சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள செந்தில் பாலாஜியின் அறைக்கு பலத்த பாதுகாப்புடன் வந்த அமலாக்கத்துறை அதிகாரிகள் இருவர் மற்றும் வங்கி அதிகாரிகள் 3 பேர் சோதனையில் ஈடுபட்டனர்.

அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தபோது வேலை வாங்கித் தருவதாக கூறி மோசடி செய்ததாக எழுந்த புகாரையடுத்து அவரது வழக்கை உச்ச நீதிமன்றம் மீண்டும் விசாரிக்க உத்தரவிட்டது.

இதையடுத்து கடந்த மே மாதம் 26-ம் தேதி முதல் ஜூன் 2-ம் தேதி வரை வருமான வரித் துறை அதிகாரிகள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் மற்றும் அவரது ஆதரவாளர் வீடுகளில் சோதனை மேற்கொண்டனர்.

அதனைத் தொடர்ந்து, அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று காலை முதல் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் உறவினர்கள் வீட்டில் சோதனை மேற்கொண்டனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

2014 - 22 ஆண்டுகளுக்கான திரைப்பட, சின்ன திரை விருதுகள் அறிவிப்பு!

முதல் டி20யில் ஆஸ்திரேலிய அணிக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்த பாகிஸ்தான்!

தேவைப்பட்டால் கூட்டணி குறித்து OPSயிடம் பேசுவேன்! |செய்திகள் : சில வரிகளில் | 29.1.26

இந்த வார ஓடிடி படங்கள்!

”நல்லவர்கள் எல்லாம் எங்கள் பக்கம்!” OPS குறித்த கேள்விக்கு நயினார் நாகேந்திரன் பதில்!

SCROLL FOR NEXT