முகப்பு
தமிழ்நாடு

மேட்டூர் அணையின் நீர்மட்டம் சரிவு

மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டதால் அணையின் நீர்மட்டம் வேகமாக சரிந்து வருகிறது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 7:07 PM
மேட்டூர் அணை
பகிர்:

மேட்டூர்: மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டதால் அணையின் நீர்மட்டம் வேகமாக சரிந்து வருகிறது. நேற்று முன்தினம் காலை 103.35அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் இன்று காலை 102.22அடியாக சரிந்துள்ளது.

கடந்த இரண்டு நாள்களில் அணையின் நீர்மட்டம் 1.13அடி சரிந்துள்ளது.

அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 576கன அடியிலிருந்து வினாடிக்கு 465கன அடியாக குறைந்துள்ளது.

அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 10,000கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவைவிட அணைக்கு வரும் நீரின் அளவு குறைவாக இருப்பதால் அணையின் நீர்மட்டம் வேகமாக சரிந்து வருகிறது.

அணையின் நீர் இருப்பு 67.74 டிஎம்சியாக உள்ளது

முழு கட்டுரையைப் படிக்க →