அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டதையடுத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் முக்கிய அமைச்சர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.
தமிழ்நாடு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சராக இருக்கும் வி.செந்தில் பாலாஜியின் வீடு, தலைமைச் செயலக அறை உள்பட 11 இடங்களில் அமலாக்கத் துறையினா் நேற்று சோதனையில் ஈடுபட்டனா்.
இதையடுத்து சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள வீட்டிலிருந்து செந்தில் பாலாஜியை இன்று அமலாக்கத் துறை அதிகாரிகள் விசாரணைக்கு அழைத்துச் சென்றனா்.
சென்னை நுங்கம்பாக்கம் அமலாக்கத் துறை அலுவலகத்துக்கு செல்லும் வழியில், நெஞ்சுவலி ஏற்பட்டு உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளதாக அமைச்சா் செந்தில் பாலாஜி கூறிய நிலையில் அவர் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் இன்று காலை முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் செந்தில் பாலாஜியை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.
இதன் தொடர்ச்சியாக சென்னை தலைமை செயலகத்தில் முக்கிய அமைச்சர்களுடன் முதல்வர் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.