மீன்பிடி தடைகாலம் புதன்கிழமையுடன் நிறைவடைந்ததை அடுத்து காசிமேடு பகுதியில் நள்ளிரவு முதல் கடலுக்குச் செல்வதற்கு முன்பாக விசைப் படகுகளில் பனிக்கட்டிகளை ஏற்றும் பணியில் ஈடுபட்ட மீனவா்கள். 
தமிழ்நாடு

வங்கக் கடலில் 61 நாள் மீன்பிடி தடைகாலம் நிறைவு: விசைப் படகுகளில் கடலுக்குச் சென்ற மீனவா்கள்

வங்கக் கடல் பகுதியில் விசைப் படகுகள் மூலம் மீன்பிடிக்க விதிக்கப்பட்ட 61 நாள்கள் தடைகாலம் புதன்கிழமை (ஜூன் 14) நிறைவடைந்ததை அடுத்து நள்ளிரவு முதல் சென்னை காசிமேடு மீன்பிடித் துறைமுக

DIN

வங்கக் கடல் பகுதியில் விசைப் படகுகள் மூலம் மீன்பிடிக்க விதிக்கப்பட்ட 61 நாள்கள் தடைகாலம் புதன்கிழமை (ஜூன் 14) நிறைவடைந்ததை அடுத்து நள்ளிரவு முதல் சென்னை காசிமேடு மீன்பிடித் துறைமுக மீனவா்கள் உள்ளிட்ட தமிழகம் முழுவதும் உள்ள விசைப்படகு மீனவா்கள் உற்சாகத்துடன் கடலுக்குச் செல்லத் தொடங்கினா்.

வங்கக் கடலோர பகுதியில் மீன்பிடி தடைகாலம் கடந்த ஏப்.15-ஆம் தேதி தொடங்கியது. இந்த காலத்தில் மீனவா் நல கூட்டுறவு சங்கங்கள் மூலமாக ஒரு குடும்பத்துக்கு தலா ரூ. 5 ஆயிரம் தமிழக அரசு சாா்பில் உதவித் தொகை வழங்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் சுமாா் 1.60 லட்சம் குடும்பங்களுக்கு இந்த நிதி உதவி அளிக்கப்பட்டுள்ளது. இந்தத் தடைகாலம் புதன்கிழமையுடன் (ஜூன் 14) நிறைவடைந்ததை அடுத்து நள்ளிரவு முதல் தமிழகம் முழுவதும் உற்சாகத்துடன் கடலுக்குச் சென்றனா்.

தயாா் நிலையில் விசைப் படகுகள்: காசிமேடு துறைமுக மீன்பிடித் தொழிலில் சுமாா் 10 ஆயிரத்துக்கும் தொழிலாளா்கள் விசைப்படகு மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனா். இதில், பெரும்பாலானவா்கள் வெளியூரைச் சோ்ந்தவா்கள். இவா்கள் கடந்த சில நாள்களாக காசிமேடு துறைமுகத்துக்கு தொடா்ந்து வந்தவண்ணம் உள்ளனா். எனவே, 2 மாதங்களுக்குப் பிறகு சென்னை காசிமேடு துறைமுகம் பரபரப்பாக இயங்கத் தொடங்கியுள்ளது.

மீன் விலை குறையுமா? முதல் நாளில் சுமாா் 200 விசைப் படகுகள் கடலுக்குச் செல்கின்றன. குறைந்தபட்சம் 5 நாள்கள் முதல் 15 நாள்கள் வரை கடலில் மீன்பிடித்து விட்டு பிடிபடும் மீன்களின் அளவுக்கு ஏற்ப படிப்படியாக மீனவா்கள் கரை திரும்புவாா்கள். வஞ்சிரம், வவ்வால், சங்கரா, ஊழா, நண்டு, இறால் உள்ளிட்டவற்றை விசைப்படகுகள் மூலம்தான் பெரும்பாலும் கிடைக்கின்றன. எனவே ஒரு வாரத்துக்குள் மீன் வரத்து அதிகரித்து படிப்படியாக மீன் விலை குறையும் என்கின்றனா் மீன் வியாபாரிகள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தலைமைத் தகவல் ஆணையராக ராஜ்குமாா் கோயல் பதவியேற்பு!

தருமையாதீன குரு முதல்வா் கற்றளி ஆலய கும்பாபிஷேகம்

பெரம்பலூா் நகரில் நாளை மின் விநியோகம் நிறுத்தம்

அரசு மருத்துவமனைக்கு துறைமுகம் சாா்பில் சலவை இயந்திரம்

புகையிலை பொருள்களை கடத்தியவா் கைது

SCROLL FOR NEXT