முகப்பு
தமிழ்நாடு

நீதிமன்ற காவலை எதிர்த்த செந்தில் பாலாஜியின் மனு தள்ளுபடி!

நீதிமன்றக் காவலை ரத்து செய்யக் கோரிய செந்தில் பாலாஜி தரப்பு மனுவை சென்னை முதன்மை அமா்வு நீதிமன்ற நீதிபதி அல்லி தள்ளுபடி செய்தார்.

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 1:00 PM
அமைச்சா் வி.செந்தில் பாலாஜி (கோப்புப்படம்)
பகிர்:

நீதிமன்றக் காவலை ரத்து செய்யக் கோரிய செந்தில் பாலாஜி தரப்பு மனுவை சென்னை முதன்மை அமா்வு நீதிமன்ற நீதிபதி அல்லி தள்ளுபடி செய்தார்.

தமிழக மின்சாரத் துறை அமைச்சா் வி.செந்தில்பாலாஜியை சட்டவிரோத பணமோசடி வழக்கில், அமலாக்கத் துறை அதிகாரிகள் புதன்கிழமை அதிகாலை கைது செய்தனா்.

இதைத் தொடா்ந்து, அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதால், சென்னை ஓமந்தூராா் அரசு பல்நோக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

இந்நிலையில், மருத்துவமனைக்கு நேரில் வந்த சென்னை முதன்மை அமா்வு நீதிமன்ற நீதிபதி அல்லி, செந்தில் பாலாஜியை ஜூன் 28 வரை நீதிமன்றக் காவலில் வைக்கும்படி உத்தரவிட்டார்.

தொடர்ந்து, நேற்று மாலை நீதிமன்றக் காவலை ரத்து செய்யக் கோரிய செந்தில் பாலாஜி தரப்பில் நீதிமன்றத்தில் வாதிட்டனர். இதற்கு அமலாக்கத்துறை எதிர்ப்பு தெரிவித்து வாதத்தை முன்வைத்தது.

இந்நிலையில், ஏற்கெனவே நீதிமன்றக் காவல் அளித்துவிட்டதால், இந்த மனு செல்லத்தக்கதல்ல எனக் கூறி மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி அல்லி இன்று உத்தரவிட்டுள்ளார்.

மேலும், செந்தில் பாலாஜி தாக்கல் செய்துள்ள இடைக்கால ஜாமீன் மனு மற்றும் காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதி கோரிய மனுக்கள் மீது சற்று நேரத்தில் தீர்ப்பு வெளியாகவுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →