தமிழ்நாடு

15 மாதங்களில் திறப்பு விழா காணும் கலைஞர் மருத்துவமனை: முதல்வர் ஸ்டாலின்

அடிக்கல் நாட்டிய பதினைந்தே மாதங்களில் இன்று திறப்பு விழா காண்கிறது 'கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை' என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

DIN

அடிக்கல் நாட்டிய பதினைந்தே மாதங்களில் இன்று திறப்பு விழா காண்கிறது 'கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை' என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

சென்னை கிண்டியில் அமைக்கப்பட்டுள்ள ‘கலைஞா் நூற்றாண்டு நினைவு பல்நோக்கு உயா் சிறப்பு மருத்துவமனை’யை பொது மக்கள் பயன்பாட்டுக்காக முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று மாலை திறந்துவைக்கிறாா்.

கிண்டியில் உள்ள கிங் ஆய்வக வளாகத்தில், ரூ.230 கோடி மதிப்பில் மொத்தம் 4.89 ஏக்கா் நிலப் பரப்பில் தரைதளம் மற்றும் 6 தளங்கள் கொண்ட 3 கட்டடங்கள் 51,429 சதுர மீட்டரில் புதிய பல்நோக்கு மருத்துவமனை கட்டப்பட்டுள்ளது. 1,000 படுக்கை வசதிகளுடன் கூடிய இந்த மருத்துவமனையில், மருத்துவ உபகரணங்களை நிறுவும் பணிகள் நிறைவடைந்துள்ளன.

இந்த மருத்துவமனையை குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு திறந்து வைப்பதாக இருந்தது. இந்த நிலையில், அவரது தேதி உறுதி செய்யப்படாததால் முதல்வா் மு.க.ஸ்டாலின் கிண்டி மருத்துவமனையை திறந்து வைக்கவுள்ளாா்.

இந்நிலையில், முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “அடிக்கல் நாட்டிய பதினைந்தே மாதங்களில் இன்று திறப்பு விழா காண்கிறது 'கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை'. எங்களின் நோக்கங்களை நிறைவேற்றியுள்ளோம்” எனத் தெரிவித்துள்ளார்.

இன்று மாலை 6 மணிக்கு பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு மற்றும் மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் முன்னிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்து உரையாற்றுகிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கோவை பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை! | செய்திகள்: சில வரிகளில் | 4.11.25

நியூயார்க்கின் முதல் முஸ்லிம் மேயராகும் ‘ஸோரான் மம்தானி’?

சினேகிதியே... அதுல்யா ரவி!

கோவை பாலியல் குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை: சி.பி. ராதாகிருஷ்ணன்

அமைதிக்கும் குழப்பத்துக்கும் இடையே சென்னையில் எங்கோ ஓரிடத்தில்... ஆஷ்னா ஜவேரி!

SCROLL FOR NEXT