தமிழ்நாடு

ஓமந்தூரார் மருத்துவமனையில் இருந்து துணை ராணுவம் வெளியேறியது!

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு பாதுகாப்பு அளித்து வந்த மத்திய துணை ராணுவ வீரர்கள் ஓமந்தூரார் மருத்துவமனையில் இருந்து வெளியேறினர்.

DIN

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு பாதுகாப்பு அளித்து வந்த மத்திய துணை ராணுவ வீரர்கள் ஓமந்தூரார் மருத்துவமனையில் இருந்து வெளியேறினர்.

தமிழக மின்சாரத் துறை அமைச்சா் வி.செந்தில்பாலாஜியை சட்டவிரோத பணமோசடி வழக்கில், அமலாக்கத் துறை அதிகாரிகள் புதன்கிழமை அதிகாலை கைது செய்தனா்.

இதற்கிடையே, அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதால், சென்னை ஓமந்தூராா் அரசு பல்நோக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். தொடர்ந்து, மருத்துவமனை வளாகத்தில் 100-க்கும் மேற்பட்ட துணை ராணுவப் படையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு அளிக்கப்பட்டது.

மேலும், செந்தில் பாலாஜியை நேற்று பரிசோதனை செய்ததில் இதயத்தில் அடைப்பு இருப்பதாகவும், உடனடியாக பை-பாஸ் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்றும் மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ளனர்.

இந்நிலையில், மருத்துவமனைக்கு நேற்று நேரில் சென்ற சென்னை முதன்மை அமா்வு நீதிமன்ற நீதிபதி அல்லி, செந்தில் பாலாஜியை ஜூன் 28 வரை நீதிமன்றக் காவலில் வைக்கும்படி உத்தரவிட்டார்.

இதனைத் தொடர்ந்து, புழல் சிறைத்துறை நிர்வாகத்தின் கீழ் செந்தில் பாலாஜி கொண்டுவரப்பட்டதால், பாதுகாப்பு பொறுப்பை ஆயுதப் படை அதிகாரிகளிடம் அமலாக்கத்துறையினர் ஒப்படைத்தனர்.

இதையடுத்து துணை ராணுவப் படையினர் வெளியேறிய நிலையில், ஆயுதப் படை காவலர்களின் கட்டுப்பாட்டின் கீழ் ஓமந்தூரார் மருத்துவமனை கொண்டு வரப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருநள்ளாறு கோயிலில் பல்லாயிரக்கணக்கானோா் தரிசனம்

மதுபாட்டில் கடத்திய 4 போ் கைது

தெரு நாய்கள் விவகாரம்: உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக விலங்கு ஆர்வலர்கள் பெரும் போராட்டம்!

பாஜகவின் கிளை அமைப்பாக மாறிய தேர்தல் ஆணையம்- முதல்வர் ஸ்டாலின்

பிரதமர் மோடி தலைமையின்கீழ் இந்தியாவில் நல்ல மாற்றங்கள்: தென் கொரிய அமைச்சர்

SCROLL FOR NEXT