தமிழ்நாடு

ஒரு மரத்தை வெட்டினால் 12 மரக்கன்றுகளை நட வேண்டும்: உயர்நீதிமன்றம்

எழும்பூர் ரயில் நிலைய விரிவாக்கப்பணிக்கு வெட்டும் ஒவ்வொரு மரத்திற்கும் 12 மரக்கன்றுகளை நட சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

DIN

எழும்பூர் ரயில் நிலைய விரிவாக்கப்பணிக்கு வெட்டும் ஒவ்வொரு மரத்திற்கும் 12 மரக்கன்றுகளை நட சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

சென்னை, எழும்பூா் ரயில் நிலையம் ரூ.734.91 கோடியில் உலகத் தரத்தில் மேம்படுத்தப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்காக ரயில் நிலையத்தையொட்டியுள்ள கட்டடங்கள் மற்றும் மரங்கள் அகற்றப்பட்டு வருகின்றன. ரயில் நிலைய விரிவாக்கத்திற்காக மரங்கள் அகற்றப்படுவதற்கு சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். 

இந்த நிலையில் சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் மரங்கள் வெட்டப்படுவதை தடுக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் பசுமை தாயகம் அமைப்பின் செயலர் வழக்கு தொடர்ந்தார். இவ்வழக்கு உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழ்நாடு அரசின் அனுமதி பெற்றே மரங்கள் வெட்டப்படுகின்றன, நிபந்தனைகள் பின்பற்றப்படும் என்று தெற்கு ரயில்வே தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 

இதைத்தொடர்ந்து ரயில் நிலைய விரிவாக்கப் பணிக்கு வெட்டப்படும் ஒவ்வாரு மரத்திற்கும் 12 மரக்கன்றுகளை நட தெற்கு ரயில்வேக்கு உத்தரவு பிறப்பித்தது. அத்துடன் மரக்கன்று நடுவதிலும், இடமாற்றுவதிலும் குறையிருப்பின் நீதிமன்றத்தை நாட பசுமை தாயக அமைப்புக்கு அனுமதியளித்து வழக்கை முடித்து வைத்தது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திடக்கழிவு மேலாண்மை: முதல்வர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம்!

கல் எறிந்தவருக்கும் பேறு...

நாயன்மார்கள் குரு பூஜை...

மருந்துகளின் விலைகளைக் குறைக்க 17 மருந்து நிறுவனங்களுக்கு டிரம்ப் அழுத்தம்!

சைபர் மோசடியால் ரூ. 1.2 லட்சம் கோடியை இந்தியர்கள் இழப்பார்களா? நீங்களும் ஜாக்கிரதையாக இருங்கள்!

SCROLL FOR NEXT