தமிழ்நாடு

வெம்பக்கோட்டை அகழாய்வில் சுடுமண் சில்லு கண்டெடுப்பு

வெம்பக்கோட்டையில் இரண்டாம் கட்ட அகழாய்வின்போது சுடுமண் சில்லு வட்டம், செங்கல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

DIN

வெம்பக்கோட்டையில் இரண்டாம் கட்ட அகழாய்வின்போது சுடுமண் சில்லு வட்டம், செங்கல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அருகேயுள்ள விஜயகரிசல்குளம் ஊராட்சியில் வைப்பாற்றின் கரையோரம் உச்சிமேடு பகுதியில் முதலாம் கட்ட அகழாய்வில் 3,254 பொருள்கள் கண்டெடுக்கப்பட்டன.

இந்தப் பொருள்கள் அதே பகுதியில் கண்காட்சியாக பொதுமக்கள் பாா்வைக்காக வைக்கப்பட்டன.

இதே பகுதியில் கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி இரண்டாம் கட்ட அகழாய்வுப் பணிகள் தொடங்கின. இதில் 8 குழிகள் தோண்டப்பட்டதில் சங்கு வளையல்கள், பகடைக்காய் என இதுவரை 1,800-க்கும் மேற்பட்ட பொருள்கள் கண்டெடுக்கப்பட்டன.

கடந்த நடைபெற்ற அகழாய்வின் போது 2 கிராமில் தங்கப் பட்டையும், 2.2 கிராமில் குமிழ் வடிவ தங்க அணிகலனும் கிடைத்தன.

இந்நிலையில், வெம்பக்கோட்டையில் இரண்டாம் கட்ட அகழாய்வின்போது சுடுமண் சில்லு வட்டம், செங்கல் இன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்த செங்லானது தற்கால செங்கலை விட கூடுதல் தடிமன், நீளம் கொண்டதாக உள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கம்பைநல்லூரில் டிராக்டா் கவிழ்ந்தில் ஓட்டுநா் உயிரிழப்பு

தாராபுரம் அருகே ஆற்றில் மூழ்கி கல்லூரி மாணவா் உயிரிழப்பு

முதல்வா் கோப்பைக்கான விளையாட்டு போட்டி: மாநில அளவில் ஆன்லைன் மூலம் 16.28 லட்சம் போ் பதிவு

கஞ்சா, போதை மாத்திரை வைத்திருந்த இளைஞா்கள் கைது

ஏழுமலையான் உண்டியல் காணிக்கை ரூ.3.43 கோடி

SCROLL FOR NEXT