பேச்சிப்பாறை அணையில் இருந்து ராதாபுரம் கால்வாயில் தண்ணீரை திறந்துவைத்தார் பேரவைத் தலைவர் மு.அப்பாவு. 
தமிழ்நாடு

அமைச்சர்களின் துறையை மாற்ற முதல்வருக்கே அதிகாரம்: சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு

அமைச்சர்களின் இலாகைவை மாற்ற முதல்வருக்கே அதிகாரம் உள்ளதாக சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு தெரிவித்தார்.

DIN

அமைச்சர்களின் துறையை மாற்ற முதல்வருக்கே அதிகாரம் உள்ளதாக சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு தெரிவித்தார்.

கன்னியாகுமரி மாவட்டம் அழகப்பபுரம்  அருகே  நிலப்பாறை  திருமூலநகரில் பேச்சிப்பாறை அணையில் இருந்து வருகின்ற  தண்ணீரை ராதாபுரம் கால்வாயில் தண்ணீர் செல்வதற்கு மதகுகளை சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு திறந்துவைத்தார்.

இதைத் தொடர்ந்து சட்டப்பேரவைத் தலைவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தமிழக முதல்வர் விவசாயிகள் மீது தனி அக்கறை கொண்டவர். அதனால் தான் அணைகளின் நீர்நிலைகளை அறிந்து ஒவ்வொரு பகுதியிலும் விவசாயத்திற்கு தண்ணீர் திறந்துவைத்து வருகிறார். ராதாபுரம் பகுதி விவசாயிகளுக்காகன பேச்சிப்பாறை அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிட முதலமைச்சர் உத்தரவிட்டிருந்தார் அதன் படி தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. 

இந்த அரசியலைப்பு சட்டத்தின் படி தமிழ்நாடு முதல் அமைச்சர் தனது அமைச்சரவையில் தனக்கு வேண்டிய யார், யாருக்கு என்ன துறை வழங்கவேண்டும் என முடிவெடுக்கும் அதிகாரம் தமிழ்நாடு முதல்வருக்கு உள்ளது. அமைச்சர்களின் துறைகளை மாற்றும் அதிகாரம் முதல்வருக்கு மட்டும் தான் உள்ளது. அதன்படிதான் முதல்வர் செயல்பட்டு வருகிறார். 

ஆனால் தமிழக முதல்வர் அனுப்பிய ஆவணத்தை தமிழக ஆளுநர் திருப்பி அனுப்பியுள்ளார். இது வேதனையாக உள்ளது. இதனை ஆளுநர் தவித்திருக்கவேண்டும். அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு உடல்நிலைய சரியில்லை. அவர் தொடர்பான வழக்கு நிலுவையில் தான் உள்ளது. வழக்கு நிலுவையில் இருக்கின்ற போது அமைச்சர் செந்தில்பாலாஜி அமைச்சர் பதவியில் இருக்கக்கூடாது என்று எந்த சட்டத்திலும் இல்லை. தண்டனை பெற்றால் மட்டும்தான் பதவியில் இருக்கக்கூடாது. 

தொடர்ந்து ஆளுநர் இந்திய அரசியல் சட்டத்திற்கு விரோதமாக செயல்பட்டு வருகிறார். முதல்வரின் உரிமையில் தலையிடாமல் இருந்திருக்கலாம். இந்தியா மதசார்பற்ற நாடு. ஆனால் மதசார்புள்ள நாடு என வெளிப்படையாக ஆளுநர் குரல் கொடுப்பது நியாயமில்லை என்றார். 

இந்நிகழ்ச்சியில் நீர்வளத்துறை நிர்வாக பொறியாளர் மாரியப்பன், உதவி செயற்பொறியாளர் கிங்ஸ்லி, வடக்கன்குளம் உதவி பொறியாளர் ஜெயலெட்சுமி, திருமூலநகர் பங்கு தந்தை பாஸ்டின், திருநெல்வேலி மாவட்ட ஊராட்சி உறுப்பினர் ஆவரைகுளம் பாஸ்கர், வள்ளியூர் ஊராட்சி ஒன்றியத் தலைவர் சேவியர் செல்வராஜா, தி.மு.க ராதாபுரம் மேற்கு ஒன்றிய செயலாளர் ஜோசப் பெல்சி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

துரை வைகோ மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் - | MDMK | Mallai Sathya | Vaiko | Political Interview

பாமக எனது கட்சி, நான்தான் தலைவர்! அன்புமணி பொதுக்குழுவை கூட்டுவது சட்டவிரோதம்! பாமக நிறுவனர் ராமதாஸ் பேட்டி

ஒடிஸாவில் தீ வைக்கப்பட்ட மாணவி: 2 வாரமாக உயிர் பிழைக்க போராடிய நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!

நயினார் நாகேந்திரன் இனியாவது உண்மை பேச வேண்டும்: ஓ. பன்னீர் செல்வம்

இந்தியா - இங்கிலாந்து கடைசி டெஸ்ட்டை நேரில் கண்டுகளிக்கும் ரோஹித் சர்மா!

SCROLL FOR NEXT