தமிழ்நாடு

பவானி காலிங்கராயன் அணையிலிருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு! 

DIN

பவானி: பவானி காலிங்கராயன் அணையிலிருந்து முதல் போக பாசனத்துக்கு வெள்ளிக்கிழமை முதல் 120 நாள்களுக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. 

பவானிசாகர் அணையில் இருந்து காலிங்கராயன் அணைக்கட்டு வாய்க்காலின் பழைய பாசன பகுதிகளுக்கு அணையில் உள்ள நீர் இருப்பு, பருவமழை மூலம் எதிர்பார்க்கப்படும் நீர்வரத்து மற்றும் குடிநீர் தேவை ஆகியவற்றை கணக்கில் கொண்டு பாசனத்திற்காக ஜுன் 16 முதல் அக்டோபர் 13 ஆம் தேதி வரையில் 120 நாள்களுக்கு 5,154 கன அடிக்கு மிகாமல் தண்ணீர் திறக்க உத்தரவிட்டது.

இதையடுத்து, காலிங்காயன் அணைக்கட்டிலிருந்து வாய்க்காலில் வெள்ளிக்கிழமை தண்ணீர் திறக்கப்பட்டது. 

காலிங்கராயன் வாய்க்காலில் வெளியேறும் தண்ணீர்.

இந்நிகழ்ச்சியில், நீர்வளத்துறை உதவி செயற்பொறியாளர் உதயகுமார், உதவிப் பொறியாளர்கள் தினகரன், செந்தில்குமார், பவித்ரன், சபரிநாதன் மற்றும் காலிங்கராயன் பாசன விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகள் பலரும் பங்கேற்றனர். 

இதன்மூலம் 15,743 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். முதல்கட்டமாக வினாடிக்கு 300 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. தேவையைப் பொறுத்து 500 கன அடி வரையில் தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்படும். எனவே, விவசாயிகள் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தி, விவசாயப் பணிகளை மேற்கொள்ளுமாறு நீர்வளத்துறை கேட்டுக் கொண்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெள்ளத்தில் சிக்கிய அரசுப் பேருந்து: அவசரகால கதவை உடைத்து மீட்கப்பட்ட பயணிகள்!

மத அடிப்படையிலான இடஒதுக்கீடு ஆபத்தானது:மோடி!

பறக்கும் உயிர்! ஹன்சிகா..

சென்னைக்கு மழை எப்போது? - தமிழ்நாடு வெதர்மேன் பதிவு

சூர்யா - 44 இசையமைப்பாளர் அறிவிப்பு!

SCROLL FOR NEXT