10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் சாதனை மாணவ, மாணவிகளுக்கு நடிகர் விஜய், ஊக்கத்தொகை வழங்கும் நிகழ்ச்சி இன்று காலை தொடங்கியது.
தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 234 தொகுதிகளிலும் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழுடன் ஊக்கத்தொகையும் வழங்குகிறார்.
அதன்படி நடிகர் விஜய்யின் கல்வி விருது வழங்கும் விழா சென்னை நீலாங்கரை ஆர்.கே.கன்வென்ஷன் மையத்தில் இன்று காலை 11 மணிக்குத் தொடங்கியது. நிகழ்ச்சிக்கு வந்த நடிகர் விஜய் மாணவர்களுடன் அமர்ந்திருக்கிறார்.
விஜய் மக்கள் இயக்கம் சார்பில் இதற்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
சுமார் 5,000 பேருக்கு காலை மற்றும் மதிய உணவு, வெளியூரில் இருந்து வரும் மாணவர்கள், பெற்றோர்கள் தங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
முதல் இடம் பெற்றவர்களுக்கு ரூ.25,000, இரண்டாம் இடம் பெற்றவர்களுக்கு ரூ. 15,000, மூன்றாம் இடம் பெற்றவர்களுக்கு ரூ. 10,000 வழங்கப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் இந்த விருது விழாவிற்கு ரூ. 2 கோடி செலவு செய்துள்ளதாகவும்கூறப்பட்டுள்ளது.
விஜய்யின் கல்வி விருது விழா, அவரது அரசியல் பிரவேசத்திற்கு அடித்தளமாக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
இதையும் படிக்க | நேரு நினைவு அருங்காட்சியகத்தின் பெயர் மாற்றப்பட்டது!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.