தமிழ்நாடு

திருப்பூரில் அரசு பேருந்தில் பயணித்த பனியன் தொழிலாளி மாரடைப்பால் சாவு!

DIN


திருப்பூர்: திருப்பூர் அனுப்பர்பாளையம் புதூரில் இருந்து அரசு பேருந்தில் ஏறி பயணித்தவர் சிறிது நேரத்திலேயே மாரடைப்பை ஏற்பட்டு அமர்ந்த நிலையிலேயே உயிரிழந்ததாக கூறப்படுகிறது. 

திருப்பூர் அனுப்பர்பாளையம் புதூர் பாரதி வீதி பகுதியை சேர்ந்தவர் அசோக்குமார்  திருமணம் ஆகாத நிலையில் வீடு வாடகைக்கு எடுத்து வாசித்து வந்தார். இவர் தினமும் அனுப்பர்பாளையம் புதூர் பகுதியில் இருந்து முதலிபாளையம் சிட்கோ பகுதியில் உள்ள பனியன் நிறுவனத்திற்கு பேருந்தில் சென்று வருவது வழக்கம்.

சனிக்கிழமை காலை வழக்கம்போல் அனுப்பர்பாளையம் புதூரில் இருந்து அரசு பேருந்தில் ஏறி பயணித்தவர் . சிறிது நேரத்திலேயே மாரடைப்பை ஏற்பட்டு அமர்ந்த நிலையிலேயே உயிரிழந்ததாக கூறப்படுகிறது. 

இதனிடையே பேருந்தானது மத்திய பேருந்து நிலையம் வந்தபோது அசோக்குமார் உயிரிழந்தது தெரியவந்தது. இது குறித்து சக பயணிகள் போலீசாருக்கு தகவல் அளித்தனர். 

இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உயிரிழந்த அசோக்குமாரின் உடலை மீட்டு உடல் கூறாய்வுக்காக திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து தெற்கு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தூத்துக்குடியில் ‘மினி டைடல் பாா்க்’: கட்டுமானப் பணிகள் 80% நிறைவு -ஆட்சியா் தகவல்

போதைப் பொருள்கள் விவகாரம் -உயா் நிலையிலான ரகசிய குழு: அரசு அதிகாரிகளுக்கு உத்தரவு

திருவேங்கடம் கலைவாணி பள்ளி பிளஸ் 1 தோ்வில் 100% தோ்ச்சி

விசாரணை கைதி உயிரிழந்த விவகாரம்: அரசுத் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

பக்கவாத பாதிப்புகளுக்கு ஒருங்கிணைந்த சிகிச்சை மையம் தொடக்கம்

SCROLL FOR NEXT