தமிழ்நாடு

அசுரன் பட வசனத்தைக் குறிப்பிட்டுப் பேசிய விஜய்!

கல்வி விருது வழங்கும் விழாவில் நடிகர் தனுஷின் 'அசுரன்' பட வசனத்தைக் குறிப்பிட்டு நடிகர் விஜய் பேசியுள்ளார். 

DIN

கல்வி விருது வழங்கும் விழாவில் வெற்றிமாறன் எழுதி, இயக்கி நடிகர் தனுஷ் நடித்த 'அசுரன்' பட வசனத்தைக் குறிப்பிட்டு நடிகர் விஜய் பேசியுள்ளார். 

தமிழ்நாட்டில் மொத்தமுள்ள  234 தொகுதிகளிலும் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழுடன் ஊக்கத்தொகையும் வழங்கும் நிகழ்ச்சி சென்னை நீலாங்கரை ஆர்.கே.கன்வென்ஷன் மையத்தில் நடைபெற்று வருகிறது. 

இந்த விழாவில் பேசிய நடிகர் விஜய், இதுவரை பல நிகழ்ச்சிகளில் பேசியிருக்கிறேன். ஆனால் முதல்முறையாக இதுபோன்ற கல்வி நிகழ்ச்சியில் பேசுகிறேன். ஒரு பொறுப்புணர்ச்சி வந்ததைப் போல இருக்கிறேன். 

நான் பள்ளியில் ஒரு சாதாரண மாணவன் தான். வருங்கால இந்தியாவின் இளம் நம்பிக்கை நட்சத்திரங்களை பார்க்கும்போது என் பள்ளி காலங்களை நினைவு கூர்கிறேன். 

சமீபத்தில் ஒரு படத்தின் வசனம் என்னை மிகவும் பாதித்தது. 'காடு வச்சிருந்தா எடுத்துக்குவானுங்க, காசு வச்சிருந்தா புடுங்கிக்குவானுங்க, ஆனா படிப்ப மட்டும் யாரும் எடுக்க முடியாது' என்று வசனம் வரும். 

கல்விக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று நீண்ட நாள்களாக என் மனதில் இருந்து வந்தது. அது இன்று நிறைவேறியிருக்கிறது என்று பேசினார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வங்கதேசம்: ஹிந்து இளைஞா் கொலையில் 7 போ் கைது

டாஸ்மாக் பணியாளா் பிரச்னைக்கு தீா்வு காண முதல்வா் பேச்சு நடத்த வேண்டும்: கு.பாலசுப்ரமணியன்

ஹிஸ்புல் முஜாஹிதீன் தலைவருக்கு எதிராக ஜாமீனில் வெளிவர இயலாத கைது ஆணை!

பல் மருத்துவப் படிப்பில் நீட் தகுதியை குறைக்கும் அதிகாரம் மாநில அரசுக்கு இல்லை: உச்சநீதிமன்றம்

நாகையில் பாய்மரப் படகு பயிற்சி மையம்: உதயநிதி தொடங்கிவைத்தாா்

SCROLL FOR NEXT