தமிழ்நாடு

தடைக்காலம் முடிந்து முதல் விடுமுறைநாள்! மீன் வாங்க சந்தைகளில் குவிந்த கூட்டம்!

DIN

மீன்பிடித் தடைக்காலம் முடிந்த முதல் விடுமுறைநாள் என்பதால், அதிக அளவிலான வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் மீன் சந்தைகளில் குவிந்துள்ளனர். 

சென்னை காசிமேடு, கடலூர் உள்ளிட்ட பல துறைமுகங்களில் வியபாரிகள் பொதுமக்கள் அதிக அளவில் குவிந்து மீன் வாங்க ஆர்வம் காட்டி வருகின்றனர். 

மீன்களின் இனப்பெருக்கத்திற்காக 2023-ம் ஆண்டும் ஏப்ரல் 15 முதல் ஜூன் 14 வரை 61 நாட்களுக்கு விசைப்படகு மற்றும் இழுவைப் படகு மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்கச் செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது.

தற்போது மீன்பிடித் தடைக்காலம் முடிந்து வந்த முதல் விடுமுறைநாள் (ஞாயிற்றுக்கிழமை) என்பதால் அதிகாலை முதலே மீன் சந்தைகளில் வியாபார்கள் மற்றும் பொதுமக்கள் குவிந்துள்ளனர். 

மீன்களின் வரத்து அதிகரித்துள்ளதால், முன்பு இருந்ததை விட மீன்களில் விலையும் குறைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். 

ஆழ்கடல் மீன்களான வஞ்சிரம், வவ்வால், காலா, பன்னை, டூனா, டைகர் இறால், புளூ கிராப், மட் கிராப், லாப்ஸ்டர், கனவா, திருக்கை ஆகிய மீன் வகைகளின் விலையும் குறைந்துள்ளதாக குறிப்பிடுகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விளையாட்டுப் போட்டிகள்: வேலம்மாள் கல்லூரி அணி ஒட்டுமொத்த சாம்பியன்

படிக்கட்டில் இருந்து தவறி விழுந்து வட மாநில தொழிலாளி பலி

தமிழகத்தில் கோடையிலும் பரவும் டெங்கு: கொசு ஒழிப்பை விரிவுபடுத்த அறிவுறுத்தல்

நகை வியாபாரியிடம் ரூ.48 லட்சம் மோசடி: இளைஞா் கைது

அரசுப்பள்ளி ஆசிரியா் திடீா் மரணம்: போலீஸாா் விசாரணை

SCROLL FOR NEXT