தமிழ்நாடு

சென்னை வரும் 10 விமானங்கள் திருப்பிவிடப்பட்டன

DIN

கனமழை காரணமாக சென்னை வரும் 10 விமானங்கள் பெங்களூருவுக்கு திருப்பிவிடப்பட்டுள்ளன. 
அதன்படி துபை, தோகா, அபுதாபி, லண்டன், சார்ஜா உள்ளிட்ட நாடுகளில் இருந்து வந்த விமானங்கள் திருப்பிவிடப்பட்டன. அதேவேளையில் கனமழையால் சென்னையில் இருந்து 17 பன்னாட்டு விமானங்களும் தாமதமாக புறப்பட்டன. தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இரவு முதல் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. சென்னையில் பெய்து வரும் கனமழையால் ஆங்காங்கே தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது. இதனை அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
சென்னையில் நேற்று ஒரேநாளில் மீனம்பாக்கத்தில் அதிகபட்சமாக 14செ.மீ மழையும், நுங்கம்பாக்கத்தில் 7 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது. இந்த நிலையில் வளிமண்டல மேலடுக்கு சுழற்றி காரணமாகவே மழை பெய்து வருகிறது என்று தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் விளக்களித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது, தமிழகம் அருகே உருவாகியுள்ள வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாகவே மழை தொடர்கிறது. 
தென்சென்னை பகுதிகளில் ஒரே இரவில் இயல்பை விட 3 மடங்கு அளவில் மழை கொட்டித்தீர்த்து உள்ளது. மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்னும் 2 அல்லது 3 நாட்களுக்கு சென்னையில் மழை தொடரும். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார். இதனிடையே தமிழ்நாடு, புதுச்சேரியில் 5 நாட்களுக்கு மிதமான மழை தொடரும் என்றும் தமிழ்நாட்டில் இன்று ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டி20 உலகக் கோப்பை பயிற்சி ஆட்டம்: இந்திய அணி வங்கதேசத்தை எதிர்கொள்ள வாய்ப்பு!

மயக்கும் விழிகள்! ஸ்ரீலீலா..

டி20 உலகக் கோப்பையில் 3-வது வீரராக ஷகிப் களமிறங்குகிறாரா?

ஹிப்ஹாப் ஆதியின் பி.டி. சார் டிரைலர்!

அழகிய ஆபத்து... சாக்‌ஷி மாலிக்!

SCROLL FOR NEXT