முகப்பு
தமிழ்நாடு

சென்னை பல்கலைக்கழகத்தில் கெளரவ விரிவுரையாளர்களுக்கு ஊதிய உயர்வு!

சென்னை பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் கெளரவ விரிவுரையாளர்களுக்கான ஊதியம் உயர்த்தப்பட்டுள்ளது. 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 7:10 PM
பகிர்:

சென்னை பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் கெளரவ விரிவுரையாளர்களுக்கான ஊதியம் உயர்த்தப்பட்டுள்ளது. 

அதன்படி சென்னை பல்கலைக்கழகத்தின் பதிவாளர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையின்படி, சென்னை பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் கெளரவ விரிவுரையாளர்களுக்கான ஊதியம் 20,000 ரூபாயில் இருந்து 30,000 ரூபாய் ஆக உயர்த்தப்படுகிறது. 

கற்பித்தல் மற்றும் ஆராய்ச்சி மாணவர்களுக்கான ஊதியம் 15,000 ரூபாயில் இருந்து 20,000 ரூபாய் ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. 

கடந்த மார்ச் மாதம் பல்கலைக்கழக நிதிக்குழு இதற்கு ஒப்புதல் வழங்கியுள்ளதாகவும் இந்த ஊதிய உயர்வு 2023-24 ஆம் கல்வி ஆண்டு முதல் நடைமுறைக்கு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.