கோப்புப் படம் 
தமிழ்நாடு

அதிமுக ஆட்சி: கூட்டுறவு சங்கங்களில் ரூ.136 கோடி ஊழல்!

2015 முதல் 2021 வரையிலான அதிமுக ஆட்சியில் கூட்டுறவு சங்கங்களில் ரூ.136 கோடி ஊழல் நடந்துள்ளதாக அறப்போர் இயக்கம் புகார் தெரிவித்துள்ளது.

DIN


2015 முதல் 2021 வரையிலான அதிமுக ஆட்சியில் கூட்டுறவு சங்கங்களில் ரூ.136 கோடி ஊழல் நடந்துள்ளதாக அறப்போர் இயக்கம் புகார் தெரிவித்துள்ளது.

அதிமுக ஆட்சிக் காலத்தில் நடந்த கூட்டுறவு சங்க ஊழல் குறித்து சிறப்பு விசரணைக் குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும் என அறப்போர் இயக்கம் கோரிக்கை வைத்துள்ளது. 

ஆர்.டி.ஐ, மூலம் பெற்ற தகவல்களின் அடிப்படையில் கூட்டுறவு, நிதித்துறை அமைச்சர்கள், மற்றும் அரசு அதிகாரிகளுக்கு அறப்போர் இயக்கம் மனு அளித்துள்ளது. 

அதில், அதிமுக ஆட்சிக் காலத்தில் 62% கூட்டுறவு சங்கங்களில் ரூ.1 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை நிதி முறைகேடு நடந்திருப்பதாகவும், 18% கூட்டுறவு சங்கங்களில் ரூ.10 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை நிதி முறைகேடு நடந்துள்ளதாகவும் குற்றம்சட்டபட்டுள்ளது.

கூட்டுறவுத்துறை தணிக்கை அறிக்கை அடிப்படையில் 1,068 கூட்டுறவு சங்கங்களில் முறைகேடு நடந்தது தெரியவந்துள்ளது. 

அதிகபட்சமாக வடக்கு சென்னையில் உள்ள பேலஸ் கூட்டுறவு சங்கத்தில் மட்டும் ரூ.8 கோடி அளவுக்கு முறைகேடு நடந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

22 கூட்டுறவு சங்கங்களில் மட்டும் தலா ரூ.1 கோடிக்கும் மேல் முறைகேடு ந்டந்துள்ளதாகவும் அதன் மொத்த மதிப்பு ரூ.42 கோடி என்றும் புகார் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆண் குழந்தைகளை அதிகம் பாதிக்கும் ஏடிஎச்டி கோளாறு! ஏன்? அறிகுறிகள் என்ன?

வளைவு, நெளிவு... அமைரா தஸ்தூர்!

பெனால்டியை தவறவிட்ட யுனைடெட் வீரர்: மோசமான சாதனையிலும் பங்கேற்பு!

நீலகிரி, கோவையில் 3 நாள்களுக்கு கனமழை!

பாகிஸ்தானில் புதிதாக 2 போலியோ பாதிப்புகள் உறுதி! 2025-ல் வேகமெடுக்கும் பரவல்!

SCROLL FOR NEXT