தமிழ்நாடு

இனி காவலர் அங்காடியில் சிறைவாசிகளின் தயாரிப்பு பொருள்கள்!

DIN


சிறைவாசிகளால் தயாரிக்கப்படும் சிறைச் சந்தை பொருள்கள் விரைவில்  தமிழ்நாடு காவலர் அங்காடியில் விற்பனைக்காக வைக்கப்படுகிறது.

தமிழக சிறைகளில் உள்ள சிறைவாசிகளால் தயாரிக்கப்படும் நல்ல தரம் வாய்ந்த பொருள்கள் காவலர் அங்காடிகளிலும், மற்ற விற்பனை நிலையங்களிலும்  சிறைவாசிகளுக்கு குறிப்பிட்ட அளவு லாபம் கிடைக்கும் வகையில் விற்பனை செய்யப்படுகிறது. 

இந்நிலையில், காவல் அதிகாரிகளின் சீருடைகள், தின்பண்டங்கள், போர்வைகள், ஆயத்த ஆடைகள், எண்ணெய்கள் மற்றும் பல தயாரிப்புகளை சிறைக்கைதிகள் சிறையிலிருந்தே தயாரித்து வருகின்றனர்.

இந்த பொருள்கள் ஃப்ரீடம்(Freedom) என்ற முத்திரையுடன் சிறைச்சாலை சந்தைகளிலும், பெட்ரோல் பங்க் விற்பனை நிலையங்களிலும் கிடைக்கக்கூடிய வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த பொருள்கள் அனைத்தும் சந்தையில் விற்பனை செய்வதை விடக் குறைந்த விலைக்கே விற்கப்படுகிறது. இதன் மூலமாகப் பெறப்படும் லாபம் சிறைக் கைதிகளுக்கே வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருமுக்கூடல் செல்லியம்மன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

மீனம்மா... மீனம்மா...

திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயில் பிரம்மோற்சவ தேரோட்டம்

வங்கக்கடலில் புயல் உருவாக வாய்ப்பு!

மேகமலை அருவிக்கு செல்லத் தடை

SCROLL FOR NEXT