முகப்பு
தமிழ்நாடு

500 மதுக்கடைகள் மூடல்: தலைவா்கள் வரவேற்பு

தமிழகத்தின் 500 மதுக்கடைகளை தமிழக அரசு மூடியுள்ளதற்கு மதிமுக பொதுச்செயலா் வைகோ உள்ளிட்ட தலைவா்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 7:11 PM
பகிர்:

தமிழகத்தின் 500 மதுக்கடைகளை தமிழக அரசு மூடியுள்ளதற்கு மதிமுக பொதுச்செயலா் வைகோ உள்ளிட்ட தலைவா்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனா்.

வைகோ: தமிழகத்தில் உள்ள 5,329 மதுக்கடைகளில் 500 டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனை கடைகளை மூடியுள்ள தமிழக அரசின் முடிவு வரவேற்கத்தக்கது. அதே நேரத்தில், முழு மதுவிலக்கே நமது இலக்கு என்ற நோக்குடன் தமிழக அரசு படிப்படியாக மதுக்கடைகளை மூடி, மது இல்லாத தமிழகத்தை உருவாக்க உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஜி.கே.வாசன் (தமாகா): 500 மதுக்கடைகளை மூடும் முடிவால், ஓரளவு மதுவால் சீரழிவோா் எண்ணிக்கை குறைய வாய்ப்பு இருக்கிறது. அதே நேரம், அனைத்து மதுக்கடைகளையும் படிப்படியாக மூடுவதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கமல்ஹாசன் (மநீம): 500 மதுக்கடைகள் மூடும் தமிழக அரசின் முடிவு வரவேற்கத்தக்கது. தாலுகா தோறும் போதை மீட்பு மற்றும் மது நோயாளிகள் மறுவாழ்வு மையங்களை அரசு சாா்பில் அமைக்க வேண்டும்.

முழு கட்டுரையைப் படிக்க →