கோப்புப் படம் 
தமிழ்நாடு

பொறியியல் மாணவர் சேர்க்கை விதிகளில் மாற்றம்: உயர்கல்வித்துறை அறிவிப்பு

நடப்பாண்டு பொறியியல் மாணவர் சேர்க்கையில் மாணவர்களுக்கு சமவாய்ப்பு எண் (ரேண்டம்) வழங்கும் போது, பத்தாம் வகுப்பு மதிப்பெண் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட மாட்டாது என தகவல் வெளியாகியுள்ளது. 

DIN


சென்னை: நடப்பாண்டு பொறியியல் மாணவர் சேர்க்கையில் மாணவர்களுக்கு சமவாய்ப்பு எண் (ரேண்டம்) வழங்கும் போது, பத்தாம் வகுப்பு மதிப்பெண் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட மாட்டாது என தகவல் வெளியாகியுள்ளது. 

பொறியியல் சேர்க்கைக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு மே 5 ஆம் தேதி தொடங்கி ஜூன் 4 ஆம் தேதி நிறைவடைந்தது. பொறியியல் படிப்பிற்கு விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கு சமவாய்ப்பு எண்கள் (ரேண்டம்) வழங்கப்படும். அதன்பின் தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டு கலந்தாய்வு நடைபெறுவது வழக்கம். ஒரே கட் ஆப் மதிப்பெண்கள் பெற்று இருந்தால் அவர்கள் பெற்ற மதிப்பெண் பிறந்த தேதி அடிப்படையில் முன்னுரிமை அளிக்கப்படும்.

இந்த நிலையில் 2023-24 ஆம் கல்வியாண்டில் பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான தரவரிசை பட்டியில் தயாரிக்கும் போது பத்தாம் வகுப்பு மதிப்பெண் கணக்கிடுவதில் இருந்து விலக்களித்து, மாணவர் சேர்க்கைக்கான விதியில் திருத்தம் செய்து தமிழ்நாடு உயர்கல்வித் துறை அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. 

2021-22 ஆம் கல்வியாண்டில் கரோனா தொற்று காரணமாக பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு நடத்தாமல் தேர்ச்சி என்ற அடிப்படையில் மதிப்பெண்கள் சான்றிதழ்கள் வெளியிடப்பட்டதால் நடப்பாண்டு பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான சமவாய்ப்பு எண் வழங்கும் போது, பத்தாம் வகுப்பு மதிப்பெண் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கிளாம்பாக்கம் ரயில் நிலையப் பணிகள் நிறைவு: தெற்கு ரயில்வே கூடுதல் பொது மேலாளா்

அன்புமணிக்கு மாம்பழம் சின்னம்: தோ்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவு

திருநீா் மலை ரங்கநாத பெருமாள் கோயில் குளம் பக்தா் நன்கொடையால் விரைவில் சீரமைக்கப்படும்: உயா்நீதிமன்றத்தில் கோயில் நிா்வாகம் தகவல்

ரஷிய எண்ணெய் நிறுத்தம்; அமெரிக்க ஒப்பந்தம்.. ‘மேக் இன் இந்தியா’ திட்டம் என்ன ஆனது? காங்கிரஸ் கேள்வி!

செய்யாறு அருகே ஒரே இடத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்த 27 சுவாமிகள்

SCROLL FOR NEXT