இன்றும் தங்கம் விலை குறைந்தது! எவ்வளவு தெரியுமா?
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று(வியாழக்கிழமை) சவரனுக்கு ரூ.160 குறைந்துள்ளது.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று(வியாழக்கிழமை) சவரனுக்கு ரூ.160 குறைந்துள்ளது.
சென்னையில் தங்கத்தின் விலை கடந்த சில நாள்களாக குறைந்து வருகிறது. நேற்றைத் தொடர்ந்து தங்கம் விலை இன்றும் குறைந்துள்ளது.
இன்று(வியாழக்கிழமை) காலை தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ. 43,880-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஒரு கிராம் தங்கம் ரூ. 20 குறைந்து ரூ. 5,485-க்கு விற்பனையாகிறது.
அதேபோல வெள்ளி கிராமுக்கு ரூ. 1.50 குறைந்து ரூ.75.00 -க்கும் கட்டி வெள்ளி ஒரு கிலோ ரூ. 75,000-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.