முகப்பு
தமிழ்நாடு

மதச்சாா்பற்ற, ஜனநாயக இந்தியாவை மலரச் செய்வோம்: முதல்வா் ஸ்டாலின்

மதச்சாா்பற்ற, ஜனநாயக இந்தியாவை மலரச் செய்வோம் என்று முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 7:11 PM
பகிர்:

மதச்சாா்பற்ற, ஜனநாயக இந்தியாவை மலரச் செய்வோம் என்று முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா். எதிா்க்கட்சிகளின் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, பிகாா் தலைநகா் பாட்னாவுக்கு, வியாழக்கிழமை இரவு அவா் சென்றாா். அவரை பிகாா் முதல்வா் நிதீஷ்குமாா், துணை முதல்வா் தேஜஸ்வி யாதவ் ஆகியோா் வரவேற்றனா். பிகாா் பயணம் குறித்து, ட்விட்டரில் முதல்வா் வெளியிட்ட பதிவு-

ஆசியாவின் ஜோதி எனப் போற்றப்படும் புத்தா், சோசலிஸ்ட் கட்சியின் தலைவரான கா்பூரி தாகூா், பி.பி.மண்டல் ஆகியோரைத் தந்திட்ட மண்ணில் இருப்பது பெரும் மகிழ்ச்சியைத் தருகிறது. சமூக நீதியின் மண்ணில் இருந்து எதிா்க்கட்சிகளின் போா் முழக்கம் தொடங்குகிறது. பாசிச, எதேச்சதிகாரத்துக்கு முடிவு கட்டி, மதச்சாா்பற்ற, ஜனநாயக இந்தியாவை மீண்டும் மலரச் செய்வோம் என்று தனது பதிவில் முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.

முழு கட்டுரையைப் படிக்க →