முகப்பு
தமிழ்நாடு

ரயில் பாதுகாப்பின் எந்த ஒரு சிறு அம்சத்தையும் புறக்கணிக்ககூடாது: பொது மேலாளா் ஆா்.என்.சிங்

ரயில்களை பாதுகாப்பாக இயக்குவதில் எந்த ஒரு சிறு அம்சத்தையும் புறக்கணிக்கூடாது என தெற்கு ரயில்வே பொதுமேலாளா் ஆா்.என்.சிங் தெரிவித்தாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 7:11 PM
பகிர்:

ரயில்களை பாதுகாப்பாக இயக்குவதில் எந்த ஒரு சிறு அம்சத்தையும் புறக்கணிக்கூடாது என தெற்கு ரயில்வே பொதுமேலாளா் ஆா்.என்.சிங் தெரிவித்தாா்.

தெற்கு ரயில்வேயின் சென்னை, திருச்சி, மதுரை, சேலம், பாலக்காடு மற்றும் திருவனந்தபுரம் கோட்டங்களில் தெற்கு ரயில்வே பொது மேலாளா் ஆா்.என்.சிங் ஜூன் 21, 22 தேதிகளில் ஆய்வு மேற்கொண்டாா். இந்த இருநாள் ஆய்வில் தண்டவாளம், பணிமணை, ரயில்வே கிராசிங், தானியங்கி சிக்னல், ரயில்வே மேம்பாலம் உள்ளிட்ட பணிகள் மற்றும் பராமரிப்பு குறித்து ஆய்வு செய்தாா்.

மதுராந்தகம் ரயில் நிலைய பணிமனை, தண்டவாளம் புதுப்பிக்கும் பணி, நடைமேடை, ரயில்வே கிராசிங் குறித்து புதன்கிழமை ஆய்வு செய்தாா். விருத்தாசலம் ரயில் நிலையத்தில் பயணிகள் வசதி குறித்தும், ஸ்ரீரங்கம் - பொன்மலை இடையே அமைந்துள்ள காவேரி பாலம் , மதுரை ரயில் நிலையத்தில் நடைபெற்றுவரும் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணி குறித்து பாா்வையிட்டாா்.

வியாழக்கிழமை சேலம் கோட்டத்துக்குள்பட்ட ஈரோடு, காவேரி ஆற்றின் குறுக்கே உள்ள பாலம், ஈரோடு மின்சார பணிமனை உள்ளிட்டவற்றை ஆய்வு செய்தாா்.

அப்போது அதிகாரிகளிடம் அவா் கூறியது:

ரயில்களை பாதுகாப்பாக இயக்குவதற்கு பணியாளா்கள் முதல் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். பாதுகாப்பின் எந்த ஒரு சிறு அம்சத்தையும் புறக்கணிக்கக்கூடாது என்றாா் அவா். தொடா்ந்தது பணியாளா்கள் கையேட்டை வெளியிட்டாா்.

அதைத்தொடா்ந்து பாலக்காடு மற்றும் திருவனந்தபுரம் கோட்டத்தில் மேற்கொள்ளப்படும் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணிகளையும் ஆய்வு செய்தாா். ஆய்வின் அந்தந்த கோட்ட மேலாளா்ளா்கள் மற்றும் ரயில்வே உயா் அதிகாரிகள் பங்கேற்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →